Loading ....

11th Standard- +1Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER - SEPTEMBER 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்

   

11th Standard - +1Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER  - SEPTEMBER  2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY  - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் 

11th Standard - +1Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER  - SEPTEMBER  2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY  - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்

11th Standard - +1Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER  - SEPTEMBER  2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY  - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் 





காலாண்டுத்தேர்வு -  செப்டம்பர் 2022

மாதிரி வினாத்தாள்-2  


    நேரம்: 3:மணி                         வகுப்பு- 11              மதிப்பெண்:90                                                            

                                                                           

                                 பொதுத்தமிழ்


அறிவுரைகள் :  

1)  நீலம்  அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்     அடிக்கோடிடுவதற்கும் 

     பயன்படுத்தவும். 

                  2) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

குறிப்பு : 

1.  அனைத்து வினாக்களுக்கும் விடை தருக..                                                                                                 14 X1 = 14

2. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் 

    குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

1. “காழ்வரை நில்லாக் கடுங் களிற்று” என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? 

 அ) ஐங்குறுநூறு             ஆ) நற்றிணை        

இ) கலித்தொகை               ஈ) பரிபாடல்

2. சரியான விடையைத் தேர்க

அ)  கல்வி அழகே அழகு                                                - 1. தொல்காப்பியச் சிறப்புப்பாயிர  உரைப்பாடல்

ஆ) இளமையில் கல்                                                        - 2. திருமந்திரம்

இ) துணையாய் வருவது தூய நற்கல்வி         - 3. ஆத்திசூடி

ஈ) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்   - 4. திருக்குறள்

                                                                                                        - 5. நாலடியார் 

அ) அ - 2 ,ஆ - 3, இ - 4 , ஈ - 1                                         ஆ) அ - 3 , ஆ - 4 , இ - 1 , ஈ - 2

இ) அ - 5 ,ஆ - 3, இ - 2 , ஈ - 1                                          ஈ) அ - 4 , ஆ - 1 , இ - 2 , ஈ - 3

3.  பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

 அ) அ. முத்துலிங்கம்    -   யுகத்தின் பாடல்  

ஆ)  பவணந்தி -  முனிவர் நன்னூல்

இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை        

ஈ)  இந்திரன் -  பேச்சு மொழியும் கவிதை மொழியும் 

  i) அ , ஆ                    ii) அ , ஈ                 iii) ஆ , ஈ                           iv) அ , இ

4. “வான் பொய்த்தது” - என்ற சொற்றொடர் உணர்த்தும்  மறைமுகப் பொருள்

 அ) வானம் இடிந்தது                                           ஆ) மழை பெய்யவில்லை     

இ) மின்னல் வெட்டியது                                     ஈ) வானம் என்பது பொய்யானது

5. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்க.

அ) அன்-  வந்தனன்          ஆ) இன்-  முடிந்தது    

இ) கு - காண்குவன்       ஈ) அ - சென்றன

6. காவடிச்சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

அ)  பாரதிதாசன்          ஆ) அண்ணாமலையார்     

இ) முருகன்                ஈ) பாரதியார்

7. பகுபத உறுப்புகளில் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள்  எவை?

 அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்             

ஆ)பகுதி, இடைநிலை, சாரியை

இ) பகுதி, சந்தி, விகாரம்                                                           

ஈ) பகுதி, விகுதி

8. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை.

அ) 9                                      ஆ) 3                                     இ) 27                             ஈ) 13

9. உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக்குறிப்பு

அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி              

ஆ) வினைத்தொகை, இடவாகுபெயர் 

இ) வினையெச்சம், வினைத்தொகை                   

ஈ) பெயரெச்சம், பண்புத்தொகை 

10. கீழ்க்கண்டவற்றுள்  இறைச்சி பற்றிய கூற்றைத் தேர்க

அ) குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்.

ஆ) ஒப்பீட்டுச்  செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க  அமையும்.

இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்.

ஈ)  உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத  குறிப்புப் பொருள்.

11. பாரதி, தலைப்பிடலை  எவ்வாறு கூறுவார்?

அ) தலையங்கம்           ஆ) முத்திரை            

இ) மகுடமிடமல்                       ஈ) அலங்காரம்

12. நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற பிரெஞ்சு ஆளுநர் யார்

 அ) துய்ப்ளே                 ஆ) அலனுவார்               இ) லெபூர்தொனே            ஈ) டூமாஸ்  

13. ஒப்புரவு என்பதன் பொருள்_______________

அ) அடக்கமுடையது                                         ஆ) பண்புடையது 

இ) ஊருக்கு உதவுவது                                         ஈ) செல்வம் உடையது

14. ‘மகள் நிலை உரைத்தல்’ என்னும் துறை__________  எனவும்  குறிப்பிடப்படும்.

அ) தலைவி ஆற்றுவித்தல்                               ஆ) மகள் மறுத்து மொழிதல் 

இ) செவிலி கண்டுரைத்தல்                               ஈ) மனை மருட்சி

    

 பகுதி - 2

பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக                

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக       3 x 2 = 6                                                                                    

15. படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை யாவை ?

16. குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது ?

17. காற்றின் தீராத பக்கங்ளில் எது எதனை எழுதிச் சென்றது ?

18. பொதுவியல் திணை என்றால் என்ன ? 

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                  2 x 2 = 4                                                                   

19. பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன் ?

20. சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது ?

21. ஐந்து விவசாய மந்திரங்கள் யாவை ?

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                             7 x 2  = 14                                                           

22. கலைச்சொல் தருக 

       அ) Backwater                                    ஆ) Cultural Elements

23. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

       அ) நஞ்சிருக்கும்                            ஆ) பிண்ணாக்கு

24. ஏதேனும் ஒன்றுக்குப் புணர்ச்சி விதி தருக 

     அ) இழுக்கின்றி                               ஆ) வில்லொடிந்தது 

25. ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக

     அ) அலர்ந்து                                      ஆ) நெருங்கின 

26. கீழ்க்காணும் வேர் சொல்லை வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்,   

      வினையாலணையும் பெயராக மாற்றி தனித்தனித்  தொடரமைக்க.  

                  தா       

27. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

               கலை, களை, கழை  

28. வல்லின மெய்களைஇட்டும்  நீக்கி எழுதுக 

      பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத்துறை 

      கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனளிக்குமென்றும் 

      போப்  கருதினார்.

29. பேச்சுவழக்கை எழுத்துவழக்காக மாற்றுக 

      அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்ச ஒரு தெளிவு கெடைக்கும்                            

     ஆ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்  

30. விகுதிகள்  எவற்றை உணர்த்தும் ? 

பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை  தருக          

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக    2 x 4 = 8                                                                                                                                                  31. “சலச வாவயில் செங்கயல் பாயும் “ - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு.

32. “மறுவிலாத அரசென இருந்த மாநகர்” – உவமையைப் பொருளுடன் விளக்குக. 

33. விரும்பியதை அடைவது எப்படி? குறள் வழி விளக்குக. 

34. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4=8                                                                               

35. கொற்கை,வஞ்சி,தொண்டி வளாகம் - குறிப்புத் தருக. 

36. ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப்பகுதி வழி  எடுத்துக்காட்டுக.

37. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை 

       எழுதுக.

38.  i) பட்டினிக்குரத்தி- குறிப்பு எழுதுக.

      ii) கல்வி கற்பிக்கும் இடங்களை தமிழ்நூல்கள் எவ்வாறு வழங்கின ? 


 பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3X4 =12

                                                                                      

39. சொல் பின்வருநிலையணி  (அல்லது) பிறிது மொழிதல் அணியைச் சான்றுடன் விளக்குக.

40. கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.




தமிழ்ப்பண்பாட்டுக் கருத்தரங்கு

                                                                                                                                                                                                         

                                

41. தமிழாக்கம் தருக.

           The folk songs of TamilNadu have  in them a remarkable  charm just as we find in the folk songs of any other country. But what is special in these Tamil songs is, they not only possess a native charm  and the aroma of the soil but have  preserved  in them a certain literary and artistic quality. This is so because the people who speak the language of  these folk  songs, Tamils, have  had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so  old and yet so full of life that they are always new and progressively modern. These songs were  born several centuries  ago; they are being  born every generation;  they will be born and reborn over and over again!


42. நயம் பாராட்டுக: மையக் கருத்தை எழுதி எவையேனும் மூன்று நயங்களை விளக்குக.

                           மீன்கள்கோடி   கோடிசூழ வெண்ணிலாவே!  ஒரு 

                           வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே! 

                           வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும் 

                           வாடிவாடி போவதேனோ? வெண்ணிலாவே! 

                           கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல் 

                           கூட்டினில் உறங்குவாயோ?  வெண்ணிலாவே! 

                           பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் 

                           பாரில்வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!

                                                                                              - கவிமணி

43. கீழ்க்காணும் கருத்துப் படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

                    

                 

பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்   

விடை தருக       3 x 6 = 18

 44. அ) நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க   .                                                                              அல்லது

     ஆ)‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்’- இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.

45. அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியும் எழுத்துமொழியும்  எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க. அல்லது          

ஆ) தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர்  ஆனந்தரங்கர் என்பதை நிறுவுக     அல்லது                         

46.அ) பிம்பம்  கதையின் வாயிலாகப் பிரபஞ்சன்  தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் பற்றி  விவரிக்க        அல்லது                                                                                  ஆ) தமிழர் வாழ்வோடு புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ. முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு  எவ்வாறு இணைக்கப்படுகிறது. 

பகுதி –  5

47.  அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                       4 + 2 = 6

         அ) ‘அம்ம வாழி’ - எனத் தொடங்கும் குறுந்தொகைப்  பாடலை எழுதுக. 

         ஆ) ‘செயல்’’ - என முடியும் திருக்குறளை எழுதுக.

குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் ,  

முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி , 

நாகர்கோவில் - 4,  📞9843448095..



11th Standard - QUARTERLY EXAM - SEPTEMBER - 2022
MODEL QUESTION PAPER - 2- PDF DOWNLOAD HERE



MODEL QUESTION PAPER-1 - PDF DOWNLOAD HERE






12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE





மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here








Post a Comment

Previous Post Next Post