12th Tamil - Study Material - அணி இலக்கணம் - 2021-2022 - 4 mark question
12 ஆம் வகுப்பு
அணி
தண்டியலங்காரம் , திருக்குறள் (இயல் - 3)
1. பொருள் வேற்றுமை அணி சான்று தந்து விளக்குக
அணி இலக்கணம்:
இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும். செய்யுளில் கவிஞர் இருவேறு பொருட்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறி பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
சான்று:
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்
விளக்கம்:
எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.
குளிர்ச்சி பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றும். தமிழ் மொழிக்கு நிகராக வேறு எந்த மொழியும் இல்லை.
அணிப்பொருத்தம்:
கதிரவனும் தமிழ் மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக் கூறி, கதிரவன் இருளை அகற்றும்; தமிழ்மொழி அக இருளை அகற்றும், அதே நேரத்தில் அதற்கு நிகராக வேறு எந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமை அணி ஆகும்.
2. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” - குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக. இக்குறட்பாவில்பயின்றுவரும் அணி நிரல்நிறை அணி.
அணி இலக்கணம்:
ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறை நிரல் நிறை ஆகும். அதாவது சிலசொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அதனோடு
தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல் நிறை அணி ஆகும்.
சான்று :
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
விளக்கம்:
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் அன்பு, அரண் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இந்தத் திருக்குறள் நிரல் நிறை அணி ஆகும்.
3. ஏகதேச உருவக அணி விளக்குக. ( அல்லது) கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளக்குக.
“ சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்”
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகிறது.
அணியிலக்கணம்:
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கு ஏற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டு விடுவது ஏகதேச உருவக அணியாகும்.
சான்று:
“ சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்”
சான்று விளக்கம்:
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்த சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். தன்னைச் சேர்ந்த வரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம் நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய இனம் என்னும் வெப்பத்தை அழித்துவிடும்.
அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.
எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
©L3MØÑÃDÊ 360°
தண்டியலங்காரம் , திருக்குறள் அணிகளுக்காக Pdf download 👇👇👇👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு - JANUARY
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here