12th Tamil - Study Material - Tamil - Public Exam (2021-2022) -மொழிப்பயிற்சி - 4 mark QUESTIONS - இயல் 1 |
12 ஆம் வகுப்பு - தமிழ்
மொழிப் பயிற்சி
4 மதிப்பெண் வினாக்கள்
இயல் - 1
இலக்கிய நயம் பாராட்டுக
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவி கூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
-கண்ணதாசன்
முன்னுரை:
இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர். சாகித்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடலில் காணப்படும் நயங்களை. காண்போம்.
மையக்கருத்து:
சங்கமாக அமைந்து படைப்பாளர்களையும், படைப்புகளையும் பெருமைப்படுத்தியது தமிழன்னை, என்பதே இப்பாடலின் மையக் கருத்தாகும்.
சொல் நயம்:
இப்பாடலில் முச்சங்கம், சொற்சங்கம் , முதுபுலவர்,பெருமாட்டி போன்ற சொற்கள் நயமுடன் அமைக்கப்பட்டு இப்பாடல் சொல்நயம் உடையதாக விளங்குகின்றது.
பொருள் நயம்:
இப்பாடலில், ‘முச்சங்கங் கூட்டி’ ‘முதுபுலவர் தமைக் கூட்டி’ ‘அளப்பரிய பொருள் கூட்டி’ ‘அற்புதங்கள் எல்லாம் அமைந்த பெருமாட்டி’ என்று தமிழின் பெருமையை, அம்மொழி பெற்றிருந்த சிறப்புகளை உணர்த்த சிறப்பான சொற்களைப் பயன்படுத்தி, தான் கூறவந்த பொருளைச் சிறப்புடன் கூறுவதால் சிறந்த பொருள் நயம் உடையதாக இப்பாடல் அமைந்துள்ளது.
தொடை நயம் :
பாடலில் மோனை எதுகை இயைபு முரண் அளபெடை ஆகியவற்றைக் கொண்டு கொடுப்பதாகும்
மோனை நயம்:
சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும்.
இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது.
முச்சங்கம் - முதுப்புலவர்
அச்சங்கம் - அளப்பரிய
சொற்சங்கம் - சுவை மிகுந்த
அற்புதங்கள் - அமைத்த
எதுகை நயம்:
பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
இப்பாடலில் அடி எதுகை பயின்று வந்துள்ளது.
முச்சங்கம்
அச்சங்கம்
சொற்சங்கம்
அற்புதம்
இயைபு நயம்:
பாடலின் சீர்களிலோ அடிகளிலோ இறுதி எழுத்தோ, அசையோ சொற்களோ ஒன்று போல வருவது இயைபு ஆகும்.
இப்பாடலின் அடிகளின் இறுதியில் ‘கூட்டி’ என்ற சொல்லும் இறுதி அடியில் ‘பெருமாட்டி’ என்ற சொல்லும் வந்து ஒரே ஓசையுடன் முடிவதால் இப்பாடலில் இயைபுநயம் பயின்று வந்துள்ளது
சந்த நயம்:
இப்பாடலை ஏற்ற இசைக்கருவிகளுடன் இசைத்து பாடினால், பாடுவோர்க்கும் கேட்பவர்களுக்கும் மிகுந்த கவி இன்பத்தைத் தரும் விதத்தில் எதுகை, மோனை, இயைபு சொற்களை அமைத்து அளவடி சீர்கள் அமைத்து சுவைபடப் பாட தகுந்த முறையில் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
சுவை நயம்:
தமிழ் மொழியின் சிறப்பைப் இப்பாடல் கூறுவதுடன் அது வளர்ந்த பெருமையையும் இப்பாடல் சுட்டுவதால் இப்பாடலில் பெருமித சுவை அமைந்துள்ளது.
முடிவுரை:
காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால், அவன் கவிதை காலத்தை வென்றது என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் கண்ணதாசன் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவி நயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணாக்கரே!
கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதும்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து நான்கு வினாக்களை உருவாக்குக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனதின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர்; மொழியை வளர்ப்பவர்களும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.
- மொழி வரலாறு (மு. வரதராசனார் )
வினாக்கள்
1.மக்கள் படைத்துக் காத்து வரும் அரிய கலை எது? அஃது ஆற்றும் செயல் யாது?
2. தாயின் முதல் விருப்பம் என்ன?
3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?
4. மொழியை வளரர்ப்பவரும், வளர்பவரும் யார்?
5. மொழி வளர்ச்சி எதனைப் பொறுத்தது?
ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக
தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள்
எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக
தாய் மொழி கல்வியின் தேவை - தாய்மொழி சிந்தனை - அறிஞர்களின் பார்வை -
கற்கும் திறன் - பயன் - இன்றைய நிலை
முன்னுரை:
“தாய் மொழி கண் போன்றது
பிற மொழி கண்ணாடி போன்றது”
நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழி கொண்டுதான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனை ஆற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தாய்மொழிவழிக் கல்வியின் தேவை:
மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்கப்படவேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்படுத்துகிறது.
தாய்மொழிச்சிந்தனை:
தாய்மொழிதான் சிந்திக்கும் திறனில் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவளர்ச்சி வாழ்விற்கு அடிப்படை .அத்தகைய மனவளர்ச்சி தாய்மொழியால் முடியும். தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும். அறிஞர்கள் பார்வை:
உலகில் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தாய்மொழி கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கிறார்கள். காந்தியடிகள் கூறும் பொழுது “ஜெகதீஸ் சந்திரபோஸ், பி.சி. இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்கு கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும்,இராய்களும் தோன்றியிருப்பார்கள்,” என்கிறார்.சாகிர் ஹீசைன் குழு ( 1938ஆம் ஆண்டு) தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகின்றது. கோத்தாரி குழு (1964) தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது.
கற்கும் திறன்:
தாய்மொழியைப் பற்றி வாழ்ந்ததால் வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியை புறக்கணித்த வாழ்ந்த நாடுமில்லை. தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் தெரிவிக்க முடியும். கற்கும் திறனை அதிகரிப்பது தாய்மொழி வழியாகவே. தாய்மொழி வழியாகக் கற்கும்போது சிந்தனைத் திறன் அதிகமாகும்.
தாய்மொழி வழிக் கல்வியின் பயன்:
“கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சி பெற்று ஒலி கேட்கிறது”. என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள். குழந்தை வளரும் சூழல் மொழித்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. தாய்மொழி வழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்டால் மிகச் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக, வளர்வார்கள். தாய்மொழிவழிக் கல்வி கற்றால் தரமான கல்வியைப் பெறுவார்கள்.
இன்றைய நிலை:
இன்று தாய்மொழி வழியில் கல்வி கற்பதைக் கௌரவ குறைச்சலாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர் பலர். தாய்மொழியில் கல்விக் கற்றவர்களைத் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களில் ஒன்றாகும். தாய்மொழியில் கல்விக் கற்போருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.
முடிவுரை:
மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல; ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தால் தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.
எண்ணங்களை எழுத்தாக்குக
ஆதி மனிதன் தன் இனத்தின் வரலாறுகளை உளிகளால் செதுக்குகிறான். தன்னைப் பாதுகாத்த குகைகளில் கூர்மையான ஆயுதங்களால் ஓவியங்களை வரைந்தான். தான் வேட்டையாடிய உணவுகளை உண்ட பின் ஓய்வு நேரத்தில் அவன் உளிகளால் செதுக்கியவை யாவும் சிற்பங்களாக, சித்திரங்களாகப் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.சைகை மொழியைக் கடந்தவன் தன் கருத்தை வரைபடமாக வரைந்து வைத்தான் .அவை இன்று மனித நாகரிகத்தின் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் கலை பொக்கிஷங்களாக விளங்குகின்றன.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
4 mark QUESTIONS
இயல் 1
QUESTION & ANSWER Pdf
download 👇👇👇👇👇 மொழிப்பயிற்சி
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
பாநயம் பாரட்டல்
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
2 mark QUESTIONS
இயல் 1,2,3 : Click Here
©L3MØÑÃDÊ 360°
Image by Lubov Lisitsa from Pixabay