11 th Tamil -Study Material - Unit 5 - சீறாப்புராணம்- 1 Mark questions
11 ஆம் வகுப்பு
இயல் -5
சீறாப்புராணம்
ஒரு மதிப்பெண் - வினா விடைகள்
HOT QUESTION
1. கூற்று : ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம்பெயர்தல் என்பது பொருள். காரணம் : அதனால் இக்காண்டத்திற்குச் செலவியற் காண்டம் என்றும் பெயருண்டு.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை : ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி
2. பொருத்துக
அ) வரை - 1. மார்க்கம்
ஆ) கம்பலை - 2. நிறைவு
இ) தீன் - 3. மலை
ஈ) பூரணம் - 4. பேரொலி
அ) 4 3 2 1
ஆ) 4 2 1 3
இ) 4 3 1 2
ஈ) 1 3 4 2
விடை : இ) 4 3 1 2
3. பொருத்துக
அ) எய்தல் - 1. யானை
ஆ) புடவி - 2. திருமணம்
இ) வாரணம் - 3. உலகம்
ஈ) வதுவை - 4. அடைதல்
அ) 4 3 2 1
ஆ) 4 2 1 3
இ) 3 4 1 2
ஈ) 1 3 4 2
விடை : அ) 4 3 2 1
4. பொருத்துக
அ) பூத்த, பொழிந்த - 1. உரிச்சொல் தொடர்
ஆ) பெரும்புகழ், தெண்டிரை - 2. எண்ணும்மை
இ) மாநகர், உறுபகை - 3. பெயரெச்சம்
ஈ) தவமும் ஈகையும் - 4. பண்புத்தொகை
அ) 4 3 2 1
ஆ) 4 2 1 3
இ) 3 4 1 2
ஈ) 1 3 4 2
விடை : இ) 3 4 1 2
5. கருத்து 1 : “சீறா” என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும்.
கருத்து 2 : சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருளாகும்.
அ) கருத்து ஒன்று சரி
ஆ) கருத்து இரண்டு சரி
இ) கருத்து 1 , 2 இரண்டும் தவறு
ஈ) கருத்து 1 , 2 இரண்டும் சரி
விடை : ஈ) கருத்து 1 , 2 இரண்டும் சரி
6. பொருந்தாத தொடரைக் கண்டறிக
அ) வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்.
ஆ) உமறுப்புலவர் எட்டயபுர அரசவைப் புலவர் கடிகை முத்துப்புலவரின் மாணவர் ஆவார்.
இ) உமறுப்புலவரை ஆதரித்தவர் பனு அகமது மரைக்காயர், அபுல் காசிம் மரைக்காயர்.
ஈ) சின்னச் சீறாவை எழுதியவர் பனு அகமது மரைக்காயர் ஆவார்.
விடை : இ) உமறுப்புலவரை ஆதரித்தவர் பனு அகமது மரைக்காயர், அபுல் காசிம் மரைக்காயர்.
7. ‘அரும்பொருள்’ - புணர்ச்சி விதி தருக
அ) ஈறுபோதல்
ஆ) இனமிகல்
இ) முன் நின்ற மெய் திரிதல்
அ) மூன்றும் சரி
ஆ) அ, ஆ சரி
இ) அ, இ சரி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ) அ, ஆ சரி
8. ‘மனையென’ - புணர்ச்சி விதி தருக
அ) இ ஈ ஐ வழி யவ்வும்
ஆ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ) முற்றுமற்று ஓரே வழி
அ) அ , ஆ -சரி
ஆ) இ மட்டும் சரி
இ) ஆ மட்டும் சரி
ஈ) ஆ , இ - சரி
விடை : அ) அ , ஆ -சரி
9. கீழ்க்காண்பவற்றுள் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை காண சொல் எது ?
அ) பொன்னகர்
ஆ) மாநகர்
இ) தெண்டிரை
ஈ) இடன்
விடை : அ) பொன்னகர்
10. பொருத்தித் தேர்க
அ) பூத்த - 1. பண்புத்தொகை
ஆ) இடன் - 2. உரிச்சொற்றொடர்
இ) தெண்டிரை - 3. ஈற்றுப்போலி
ஈ) உறுபகை - 4. பெயரெச்சம்
அ) 4 1 3 2
ஆ) 4 2 3 1
இ) 4 3 1 2
ஈ) 4 2 1 3
விடை : இ) 4 3 1 2
11. பொருத்தித் தேர்க
அ) பொலிந்த - 1. உரிச்சொற்றொடர்
ஆ) பெரும்புகழ் - 2. பெயரெச்சம்
இ) மாநகர் - 3. எண்ணும்மை
ஈ) தவமும் ஈகையும் - 4. பண்புத்தொகை
அ) 2 4 1 3
ஆ) 2 4 3 1
இ) 2 3 1 4
ஈ) 2 1 4 3
விடை : அ) 2 4 1 3
12. பொருத்தித் தேர்க
அ) வாரணம் - 1. மார்க்கம்
ஆ) வதுவை - 2. யானை
இ) தீன் - 3. திருமணம்
ஈ) புடவி - 4. உலகம்
அ) 3 2 1 4
ஆ) 2 3 1 4
இ) 2 1 3 4
ஈ) 3 1 2 4
விடை : ஆ) 2 3 1 4
13. பொருத்தித் தேர்க
அ) எய்தல் - 1. நெருங்கிய
ஆ) நல்கல் - 2. நிறைந்த
இ) துன்ன - 3. அடைதல்
ஈ) மண்டிய - 4. அளித்தல்
அ) 3 1 4 2
ஆ) 4 3 2 1
இ) 3 4 1 2
ஈ) 2 3 4 1
விடை : இ) 3 4 1 2
14. பொருத்தித் தேர்க
அ) கம்பலை - 1. திறந்து
ஆ) கோன் - 2. நிறைவு
இ) பூரணம் - 3. அரசன்
ஈ) விண்டு - 4. பேரொலி
அ) 4 2 1 3
ஆ) 4 3 2 1
இ) 4 3 2 1
ஈ) 2 3 4 1
விடை : இ) 4 3 2 1
15. “தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும்
மானமும் பூத்ததிண் மறனும் வெற்றியும்” - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
அ) எதுகை , மோனை
ஆ) அந்தாதி, எதுகை
இ) மோனை , இயைபு
ஈ) எதுகை, இயைபு
விடை : ஈ) எதுகை, இயைபு
16. உமறுப்புலவரின் தந்தை பெயர் என்ன?
முகம்மது நயினார் பிள்ளை
17. உமறுப்புலவரின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றி எழுதுக?
பிறப்பு: 25 - 10 - 1642
இறப்பு: 28 - 07 - 1703
18. வள்ளல் சீதக்காதியின் இயற்பெயர் என்ன ?
செய்கு அப்துல்காதிர் மரைக்காயர்
19. சீறாப்புராணத்தின் முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு ?
கி. பி 1842
20. உமறுப்புலவரை ஆதரித்தவர் யார் ?
வள்ளல் சீதக்காதி, அப்துல் காசிம் மரைக்காயர்
21. சின்னச் சிறாவைப் பாடியவர் யார் ?
பனு அகமது மரைக்காயர்
22. உமறுப்புலவர் இயற்றிய நூல் எது ?
முதுமொழிமாலை
23. நபிகளின் வாழ்க்கை என்பது அரபு மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீறத்துன்னபி
24. ‘விலாதத்’ என்ற அரபு சொல்லிற்கான தமிழ்ச்சொல் என்ன ?
பிறப்பு
25. விலாதத்துக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள படங்களும் பாடல்களும் எத்தனை ?
24 படலம், 1740 பாடல்கள்
26. ‘நுபுவத்’ என்ற அரபுச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் என்ன ?
தீர்க்கதரசி
27. நுபுவத் காண்டத்தில் இடம்பெற்றுள்ள படலங்களும் பாடல்களும் எத்தனை ?
21 படலம் , 1104 பாடல்கள்
28. ஹிஜ்ரத்துக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள படலங்களும் பாடல்களும் எத்தனை ?
47 படலம் , 2683 விருத்தப்பாக்கள்
29. ‘ஹிஜ்ரத்’ என்ற அரபு சொல்லுக்கான தமிழ் சொல் என்ன?
இடம்பெயர்தல்
30. சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் எத்தனையாவது வயது நிகழ்வுகளுடன் முடிவடைகிறது?
ஐம்பத்தி ஏழு வயது
31. முகமது நபி எத்தனை வயது வரை மக்காவில் இருந்தார் ?
52 வயது
32. மக்காவில் முகமது நபிக்குக் கொடுமைகள் செய்தது எந்த இன மக்கள்?
குறைசி இன மக்கள்
33. உறுபகை,இடன் ஆகிய சொற்களுக்கு உரிய இலக்கணக்குறிப்பு(புத்தக வினா : பக்- 139)
அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி
ஆ) வினைத்தொகை , இடவாகுபெயர்
இ) வினையெச்சம் , வினைத்தொகை
ஈ) பெயரெச்சம் , பண்புத்தொகை
விடை : அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி
34. பூத்த, பெரும்புகழ் ஆகிய சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம் , வினையெச்சம்
ஆ) பெயரெச்சம் , வினைத்தொகை
இ) பெயரெச்சம் , பண்புப்பெயர்
ஈ) பெயரெச்சம் , பண்புத்தொகை
விடை : ஈ) பெயரெச்சம் , பண்புத்தொகை
35. மலைவிலாது , கலைவளர் ஆகிய சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு
அ) ஐந்தாம் வேற்றுமைத்தொகை , தொகுத்தல் விகாரம்
ஆ) இடைக்குறை , தொகுத்தல்விகாரம்
இ) தொகுத்தல் விகாரம் , ஐந்தாம் வேற்றுமைத்தொகை
ஈ) தொகுத்தல் விகாரம் , இடைகுறை
விடை : இ) தொகுத்தல் விகாரம் , ஐந்தாம் வேற்றுமைத்தொகை
36. நிறுத்தியோர், சுதை ஒளி ஆகிய சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை , பண்புத்தொகை
ஆ) வினையாலணையும் பெயர் , வினைத்தொகை
இ) வினையாலணையும் பெயர் , ஆறாம் வேற்றுமைத்தொகை
ஈ) வினைமுற்று , வினைத் தொகை
விடை : இ) வினையாலணையும் பெயர் , ஆறாம் வேற்றுமைத்தொகை
37. “புடவி” என்பதன் பொருள்
அ) கடல்
ஆ) மலை
இ) ஆறு
ஈ) பூமி
விடை : ஈ) பூமி
38. “மலை விலா தருளிய வள்ளியோர்” - இவ்வடியில் வள்ளியோர் எனப்படுபவர்
அ) புலவர்
ஆ) மன்னன்
இ) வள்ளல்கள்
ஈ) இரவலர்
விடை : இ) வள்ளல்கள்
39. “ வாரண மதலை” -இவ்வடியில் ‘ வாரண ‘ என்பது
அ) அழகு
ஆ) மதம்
இ) யானை
ஈ) குரங்கு
விடை : இ) யானை
40. “ வதுவையின் மனையென இருந்த” - இவ்வடியில் ‘வதுவை’ என்பது
அ) திருமணம்
ஆ) விருந்து
இ) தினம்தினம்
ஈ) சடங்கு
விடை : அ) திருமணம்
41. “ஊனமில் ஊக்கமும் ஒளிர்க் காய்ந்த நல்” - இவ்வடியில் ‘காய்ந்த’ என்பது
அ) புகழுடைய
ஆ) ஒழுக்கமுடைய
இ) சிறந்த
ஈ) பிறந்த
விடை : இ) சிறந்த
42. “கடலென ஒலித்ததா வனத்தின் கம்பலை” - இவ்வடியில் ‘கம்பலை’ என்பது
அ) பேரொளி
ஆ) பேரொலி
இ) அழுகை
ஈ) பாலைநிலம்
விடை : ஆ) பேரொலி
43. சரியானதைத் தேர்க
அ) வரை - இறுதி
ஆ) வதுவை - திருமணம்
இ) வாரணம் - வண்ணம்
ஈ) புடவி - கடல்
விடை : ஆ) வதுவை - திருமணம்
44. பொருந்தாததைத் தேர்க
அ) சீறாப்புராணம் என்பது நபி நாயகத்தின் வாழ்க்கை வரலாறு ஆகும்.
ஆ) ‘சீறத்’ என்பதே ‘சீறா’ என்றானது.
இ) சீறாப்புராணம் முழுவதும் உமறுப்புலவர் பாடினார்.
ஈ) சீதக்காதி வள்ளல் ஆவார்.
விடை : இ) சீறாப்புராணம் முழுவதும் உமறுப்புலவர் பாடினார்.
45. பொருந்தாததைத் தேர்க
அ) விலாதத்துக் காண்டம் 24 படலத்தை உடையது.
ஆ) நுபுவத் காண்டம் 21 படலத்தை உடையது.
இ) ஹிஜ்ரத்து காண்டம் 46 படலத்தை உடையது.
ஈ) சீறாப்புராணம் மொத்தம் 92 படலங்களை உடையது.
விடை : இ) ஹிஜ்ரத்து காண்டம் 46 படலத்தை உடையது.
46. பொருத்தி விடை தேர்க
அ) பெரும்புகழ் - 1. வினையெச்சம்
ஆ) சிந்தி - 2. உரிச்சொற்றொடர்
இ) மலிந்த - 3. பண்புத்தொகை
ஈ) மாநகர் - 4. பெயரெச்சம்
அ) 4 2 1 3
ஆ) 3 1 4 2
இ) 3 2 4 1
ஈ) 2 1 4 3
விடை : ஆ) 3 1 4 2
47. பொருத்தி விடை தேர்க
அ) வரை - 1. நிறைந்த
ஆ) பொறிகள் - 2. மார்க்கம்
இ) மண்டிய - 3. மலை
ஈ) தீன் - 4. ஐம்புலன்
அ) 3 4 2 1
ஆ) 3 1 2 4
இ) 3 4 1 2
ஈ) 2 1 3 4
விடை : இ) 3 4 1 2
48. சரியானதைத் தேர்க
அ) மதீனா ஒரு படை நகரம்.
ஆ) மதீனா ஒரு நோய் நகரம்.
இ) மதீனா ஒரு வறுமை நகரம்.
ஈ) மதீனா ஒரு மாளிகை நகரம்.
விடை : ஈ) மதீனா ஒரு மாளிகை நகரம்.
49. சரியானதைத் தேர்க
அ) மக்கா நகரில் வாழ்ந்த மக்கள் குர்த் இனத்தினர்.
ஆ) மக்கா நகரில் நபிகள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்.
இ) மதீனா நகரில் ‘தீன்’ பழுத்தது.
ஈ) மதீனா நகரில் வறுமை நிலவியது.
விடை : இ) மதீனா நகரில் ‘தீன்’ பழுத்தது.
50. சரியானதைத் தேர்க. ( புத்தக வினா : பக் - 139 )
அ) வரை மலை
ஆ) வதுவை திருமணம்
இ) வாரணம் யானை
ஈ) புடவி கடல்
1) அ, ஆ, இ - சரி , ஈ - தவறு
2) ஆ , இ, ஈ , - சரி , அ - தவறு
3) அ , இ , ஈ , - சரி , ஆ - தவறு
4) அ , ஆ , ஈ , - சரி , இ - தவறு
விடை : 1) அ, ஆ, இ - சரி , ஈ - தவறு
51. சீறாப்புராணம் யாருடைய வரலாற்றை கூறுகிறது?
நபிகள் நாயகத்தின் வரலாறு
52. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
உமறுபுலவர்
53. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
3
54. ஹிஜிரத்துக் காண்டத்தின் வேறு பெயர் யாது?
செலவிற்காண்டம்
55. ‘சீறத்’ என்பது எம்மொழிச் சொல்?
அரபு
56. ‘சீறா’ என்பதன் பொருள் யாது?
வாழ்க்கை
57. புராணம் என்பதன் பொருள் யாது?
வரலாறு
58. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர் யார்?
வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர்
59. யார் வேண்டுகோளுக்கிணங்க சீராபுராணம் இயற்றப்பட்டது?
வள்ளல் சீதக்காதி
60. சின்னச் சீறாவை இயற்றியவர் யார் ?
பனு அகமது மரைக்காயர்
61. உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
கடிகை முத்துப் புலவரின் மாணவர்
62. உமறுப்புலவர் எந்த அரசவையில் தலைமைப் புலவர்?
எட்டயபுரம்
63. உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்?
முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம்
64. ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கான பொருள் ?
செலவியற் காண்டம் ( இடம்பெயர்தல்)
65. மக்கா நகரில் வாழ்ந்த மக்களின் இனம் யாது ?
குறைசி
66. நபிகள் நாயகத்தின் துணைவர் பெயர் என்ன?
அபூபக்கர்
67. மததீனாவில் மேருமலையை போன்று இருந்தது எது?
மேல் மாடங்கள்
68. மதீனாவில் கடல் போல் இருந்தது எது ?
மதீனா நகர கடைவீதி ஒலி
69. மதினாவில் கட்டப்பட்ட தோரணங்களும் செடிகளும் எதை போல் இருந்தன?
காடுகள் போல் இருந்தன
70.பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த நகர்
அ) பாக்தாத் நகர்
ஆ) மக்கா நகர்
இ) மதீனா நகர்
ஈ) முத்து நகர்
விடை : இ) மதீனா நகர்
71. மதீனா நகர மக்கள், தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது
அ) ஆரணிய காண்டம்
ஆ) விலாதத்துக் காண்டம்
இ) நுபுவ்வத்துக் காண்டம்
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்
விடை : ஈ) ஹிஜிரத்துக் காண்டம்
72. ‘சீறத்’ என்னும் அரபுச் சொல் ____________ எனத் திரிந்தது.
அ) சிறா
ஆ) சீரா
இ) சீற்
ஈ) சீறா
விடை : ஈ) சீறா
73. முகம்மது நபியுடன் மதீனாவிற்கு சென்றவர் யார் ?
அ) அகமது
ஆ) அப்துல் காசீம்
இ) அபூபக்கர்
ஈ) பனு அகமது
விடை : இ) அபூபக்கர்
74. மதீனா நகரின் வீதிகள்_________ போன்று இருந்தன
அ) குறிஞ்சி
ஆ) மேருமலை
இ) முல்லை
ஈ) பிரபஞ்சம்
விடை : ஈ) பிரபஞ்சம்
75. பொருத்தித் தேர்க
அ) துன்ன - 1. அளித்தல்
ஆ) எய்தல் - 2. நிறைந்த
இ) மண்டிய - 3. நெருங்கிய
ஈ) நல்கல் - 4. பெறுதல்
அ) 3 4 2 1
ஆ) 3 4 1 2
இ) 3 1 4 2
ஈ) 3 2 4 1
விடை : அ) 3 4 2 1
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
11 ஆம் வகுப்பு
இயல் -5
சீறாப்புராணம்
ஒரு மதிப்பெண் - வினா விடைகள்
QUESTION & ANSWER Pdf
download 👇👇👇👇👇 மொழிப்பயிற்சி
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : Click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
11 ஆம் வகுப்பு
இயல் - 5
சீறாப்புராணம்
1 Mark questions
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
பாநயம் பாரட்டல்
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
2 mark QUESTIONS
இயல் 1,2,3 : Click Here
©L3MØÑÃDÊ 360°
Image by Alexander Lesnitsky from Pixabay School stickers created by Stickers - Flaticon