11 th Tamil -Study Material - Unit 5 - Seraapporaanam- Book back Questions- சீறாப்புராணம்- புத்தக வினா விடைகள்
பாடங்களை எளிதாகப் படித்து அதிக மதிப்பெண் பெறுவதற்கு STUDY MATERIAL மிகவும் உதவும். புத்தக வினாக்கள்( BOOK BACK QUESTIONS ) உங்களுக்கு STUDY MATERIAL ஆக தரப்பட்டுள்ளது. இது உதவியாக இருக்கும். இயல் 5 -
( UNIT 5 ) சீறாப்புராணம் பகுதியில் இடம் பெற்றிருக்கின்ற புத்தக வினா விடைகள்
( BOOK BACK QUESTIONS ) STUDY MATERIAL ஆகத் தெளிவாக உங்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தக வினா விடைகளை( BOOK BACK QUESTIONS ) நீங்கள் முறையாகப் படித்து எழுதி பழகி வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். இயல் - 5, ( UNIT 5 ) சீறாப்புராணம் மிக எளிமையான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்தின் புத்தக வினா விடைகள் ( BOOK BACK QUESTIONS ) இங்கே உங்களுக்கு விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் புத்தக வினா விடைகளை( BOOK BACK QUESTIONS ) நீங்கள் Pdf வடிவில் பெறவும் இங்கே உங்களுக்கு வசதி தரப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புத்தக வினா விடைகளை( BOOK BACK QUESTIONS ) நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்ள வாழ்த்துகின்றேன். kurusady M.A. Jelestin
பாடங்களை எளிதாகப் படித்து அதிக மதிப்பெண் பெறுவதற்கு STUDY MATERIAL மிகவும் உதவும். புத்தக வினாக்கள்( BOOK BACK QUESTIONS ) உங்களுக்கு STUDY MATERIAL ஆக தரப்பட்டுள்ளது. இது உதவியாக இருக்கும். இயல் 5 -
( UNIT 5 ) சீறாப்புராணம் பகுதியில் இடம் பெற்றிருக்கின்ற புத்தக வினா விடைகள்
( BOOK BACK QUESTIONS ) STUDY MATERIAL ஆகத் தெளிவாக உங்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தக வினா விடைகளை( BOOK BACK QUESTIONS ) நீங்கள் முறையாகப் படித்து எழுதி பழகி வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். இயல் - 5, ( UNIT 5 ) சீறாப்புராணம் மிக எளிமையான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்தின் புத்தக வினா விடைகள் ( BOOK BACK QUESTIONS ) இங்கே உங்களுக்கு விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் புத்தக வினா விடைகளை( BOOK BACK QUESTIONS ) நீங்கள் Pdf வடிவில் பெறவும் இங்கே உங்களுக்கு வசதி தரப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புத்தக வினா விடைகளை( BOOK BACK QUESTIONS ) நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்ள வாழ்த்துகின்றேன். kurusady M.A. Jelestin
11 ஆம் வகுப்பு
இயல் -5
சீறாப்புராணம்
புத்தக வினா - விடைகள்
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1.உறுபகை,இடன் ஆகிய சொற்களுக்கு உரிய இலக்கணக்குறிப்பு
அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி
ஆ) வினைத்தொகை , இடவாகுபெயர்
இ) வினையெச்சம் , வினைத்தொகை
ஈ) பெயரெச்சம் , பண்புத்தொகை
விடை : அ) உரிச்சொற்றொடர், ஈற்றுப் போலி
2.சரியானதைத் தேர்க.
அ) வரை மலை
ஆ) வதுவை திருமணம்
இ) வாரணம் யானை
ஈ) புடவி கடல்
1) அ, ஆ, இ - சரி , ஈ - தவறு
2) ஆ , இ, ஈ , - சரி , அ - தவறு
3) அ , இ , ஈ , - சரி , ஆ - தவறு
4) அ , ஆ , ஈ , - சரி , இ - தவறு
விடை : 1) அ, ஆ, இ - சரி , ஈ - தவறு
குறுவினா
1. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
மதினா நகரில் மேல்மாடங்கள் மலைபோல் உயர்ந்து இருந்தன.
அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி பெரும் கடல் ஒலிபோல் இருந்தது.
மதினா நகரின் வீதிகள் பிரபஞ்சம் போல் பரந்து விரிந்து இருந்தன.
அத்துடன் பெரிய மாளிகைகள் சிறிதும் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன.
தோரணங்களும் கட்டப்பட்டு பொன்னகர் போல் பொலிந்தது.
அதனால் மதீனா நகரம் ‘ஒரு மாளிகை நகரம்’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
2. நெருங்கின - உறுப்பிலக்கணம் தருக.
நெருங்கின = நெருங்கு + இன் + அ
நெருங்கு - பகுதி
இன் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
3. “ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்ந்தநல்
தீன்எனுஞ் செல்வமே பகுத்த சேணகர்”
- இப்பாடலடிகளில் ஒளிரக் காய்ந்தது எது? பழுத்தது எது?
மதினா நகரில் திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்கமும் காய்த்திருந்தன.
தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.
சிறுவினா
1.”கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” - யாது ?
மதினா நகரில் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டோர் நிறைந்திருந்ததால், கலைஞர்களும் மறையவர்களும் தாம் எண்ணிய பொருள் வளத்தைக் கொண்டிருந்தனர் என்பதாம்.
2. “மறுவிலா அரசெனை இருந்த மாநகர்” - உவமையைப் பொருளுடன் விளக்குக.
“குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவது போல” என்பது உவமையின் பொருள். உவமை : குறைவில்லாத மானுட அறத்தைப் பெற்ற சிறந்த அரசு.
உவமேயம் : அழகுடன் இருந்த மதீனா நகரம்.
உவம உருபு: என
பொருத்தம் :
குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவது போல என்பது உவமையின் பொருள்.
மதினா நகருக்கு இஃது உவமையாக கூறப்பட்டுள்ளது.
மாநகரில் வறுமை நோய் முதலான குற்றங்கள் எதுவும் இல்லை.
அவை ஓடி மறைந்த நிலையில் குறைவில்லாத மானுட அறம், அந்நகரில் செங்கோல் ஆட்சி புரிந்தது.
அதனால் மதீனா நகரம், சிறந்த அரசைப் போல் பொலிவுடன் இருந்தது என உமறுப்புலவர் கூறுகிறார்.
நெடுவினா
1.மதீனா நகரம் ஒரு வளமான நகரம் என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
மதீனா மாநகரம் ஒரு வளமான நகரம். ஏனெனில் இந்நகரம்
1. மாளிகை நகரம்
2. கொடை நகரம்
3. பொன்னகரம்
4. மனை நகரம்
5. மாநகரம்
6. ஒண்ணகரம்
7. செம்மை நகரம்
மாளிகை நகரம் :
மேரு மலையைப் போன்று மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன. அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த ஒலி, பெரும் கடல் ஒலி போன்று இருந்தது. மதீனா நகரின் வீதிகள் பேரண்டத்தைப் போன்று பரந்திருந்தன. அந்நகரில் சிறிதும் இடைவெளியின்றி மாளிகைகள் அமைந்திருந்தன.
கொடை நகரம் :
பழைமையான மதீனா நகரம் , கலைஞர்களும் மறையவர்களும் நினைக்கும் பொருள் வளத்தைக் கொண்டது. அங்கு எந்தப் பொருளும் இல்லையென்று சொல்வதற்கு இல்லை. அப்படிக் கேட்பவருக்கும் அப்பொருளையெல்லாம் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டவர்கள் உண்டு. அவ்வள்ளல்களை விடக் குறையாத பெரும் புகழைப்
பெற்றது மதீனா நகரம்
பொன்னகரம்:
கட்டப்பட்ட தோரணங்களும் கொடிகளும் காடுபோல நெருங்கியிருந்தன. மலைபோன்ற யானைகள் அவ்விடத்தில் நிறைந்திருந்தன. வழிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன. இவற்றால் முழுமை பெற்ற பூமியைப்போல மதீனா நகரம் பொன்னெனப் பொழிந்தது
மனை நகரம்:
மதீனா நகரத்தில் வெண்சுண்ணச் சாந்தினைக் கொண்ட மாளிகைகள் ஒளிர்ந்தன. வீதிகளில் புதிய பூக்கள் சிந்திக் கிடந்தன. ஒவ்வொருவரையும் அழைத்துக் கொடுக்கும் விருந்தானது இனிமையுடன் இருந்தது. இதனால் அந்நகர் திருமண வீட்டைப் போன்று பொலிவுடன் காட்சியளித்தது
மாநகரம்:
பகை, வறுமை, நோய் முதலியவை மதீனா நகரிலிருந்து ஓடி விட்டன. மேலும், குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும்புகழ் பெற்ற சிறந்த அரசைப் போலப் பொலிவுடன் இருந்தது மதீனா நகரம்.
ஒண்ணகரம்:
அலைகடலானது முத்தையும் பல்வேறு அணிகளையும் சிதறுவது போல் மதீனா நகரில் மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்.தேன் அருந்தியவர்கள் மயங்குவது போலே பலவாறான பொருள் வளத்தால் ஒளி பெற்று திகழ்கிறது மதீனா நகரம்.
செம்மை நகரம்:
மதீனா நகரில் தானம், ஒழுக்கம், தவம், ஈகை , மானம் முதலியன பூத்திருந்தன. திண்ணிய வலிமை நல்கும் வெற்றி,அவ்வெற்றியைத் தருகின்ற குறைவற்ற ஊக்கம் முதலியன காத்திருந்தன. தீன் எனும் செல்வம் பழுத்திருந்த செம்மை பொருந்திய நகராக மதீனா இருந்தது.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
11 ஆம் வகுப்பு
இயல் -5
சீறாப்புராணம்
புத்தக - வினா விடைகள்
Book back QUESTION & ANSWER Pdf
download 👇👇👇👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
11 ஆம் வகுப்பு
இயல் - 5
சீறாப்புராணம்
1 Mark questions
சீறாப்புராணம்
1 Mark questions (75) Pdf : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
பாநயம் பாரட்டல்
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
2 mark QUESTIONS
இயல் 1,2,3 : Click Here