Loading ....

12th Standard -Tamil -Study Material -EYAL 4 -one word Questions -HOT QUESTION-பலவுள் தெரிக



 

12th Standard -Tamil -Study Material -EYAL 4 -one word Questions -HOT QUESTION-பலவுள் தெரிக



தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கானஇரண்டாம் திருப்புதல் தேர்வில்12 th standard-Second Revision exam - march 2022  இடம்பெற இருக்கின்ற பலவுள் தெரிக - One word பகுதிக்கான வினா-விடைகளில் ,இயல் -4,பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் - EYAL 4 -இன் one word Questions

இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் 12 th standard-Second Revision exam - March 2022 நிச்சயமாக பலவுள் தெரிக - One word பகுதியில் 14 மதிப்பெண்களை( 14 Mark) உங்களால் பெற்றுக் கொள்ள இயல் -4,பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் - EYAL 4 -இன் one word Questions இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இயல் -4,பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் - EYAL 4 -இன் one word Questions இந்த ஒரு கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- Second Revision exam -march 2022 நீங்கள் நிச்சயமாக 14 மதிப்பெண்களைப் ( 14 Mark ) பெற இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

 

இந்த பதினான்கு மதிப்பெண்களைப் பெறுவதன்  மூலமாகத்  தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard-Second Revision exam - March 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இயல் -4,பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் - EYAL 4 -இன் one word Questions இந்தப் பலவுள் தெரிக - One word கேள்விகளை நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin 

இயல் - 4

உரைநடை     : பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

செய்யுள்         : இதில் வெற்றிபெற

இலக்கணம்   : பா இயற்றப் பழகலாம்

ஒரு மதிப்பெண் வினா விடைகள் 

நம்மை அளப்போம் - பக்கம் : 101

பலவுள் தெரிக ( புத்தக வினாக்கள் ) 

1.சுரதா நடத்திய கவிதை இதழ் (பக் : எண் : 101)March - 2020, PTA : 2

 அ) இலக்கியம்                                       ஆ) காவியம்  

இ) ஊர்வலம்                                            ஈ) விண்மீன்

விடை :  ஆ) காவியம்  

2.  “விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற 

       வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” -  இத்தொடர் தரும் 

முழுமையான பொருள் (பக் : எண் : 101)

அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு 

ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு 

இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு 

ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர் ,முகில் அனைத்தும் வேறு வேறு 

விடை : ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர் ,முகில் அனைத்தும் வேறு வேறு 

3.  சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க (பக் : எண் : 101)

அ) வசம்பு                                      ஆ) மணத்தக்காளியிலைச்சாறு  

இ) கடுக்காய்                                 ஈ) மாவிலைக்கரி

விடை : இ) கடுக்காய்      

4. . ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்  (பக் : எண் : 101) PTA : 1,2

அ) இலக்கியம்                            ஆ) கணிதம்     

 இ) புவியியல்                               ஈ) வேளாண்மை

விடை :    ஆ) கணிதம்


உரைநடை     : பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

சிறப்பு ஒரு மதிப்பெண் வினா விடைகள்

1. பின்னத்தூர் நாராயணசாமி உரை எழுதிய நூல் ( பக்கம் : 80 )

அ) நற்றிணை     ஆ) குறுந்தொகை                  இ) ஐங்குறுநூறு             ஈ) கலித்தொகை

விடை : அ) நற்றிணை

2. கீழ்க்காண்பவர்களில் சிலப்பதிகார உரையாசிரியர் யார்? ( பக்கம் : 80 )

அ) நடேசனார்      ஆ) வ.சுப. மாணிக்கம்          இ) வேங்கடசாமி              ஈ) சோமசுந்தர பாரதி

விடை  :    இ) வேங்கடசாமி 

3. வ. சுப. மாணிக்கனார் துணை வேந்தராகப்  பணியாற்றிய பல்கலைக்கழகம்  ( பக்கம் : 80 )

அ) சென்னைப் பல்கலைக்கழகம்                                ஆ) பாரதியார் பல்கலைக்கழகம் 

இ) மதுரை பல்கலைக்கழகம்                                               ஈ) பாரதிதாசன் பல்கலைக்கழகம்

விடை  : இ) மதுரை பல்கலைக்கழகம்  

 4. மடங்கள் பாடசாலைகள் இரண்டிற்கும் பொதுவாக வழங்கப்பட்ட பெயர்  ( பக்கம் : 81 )

அ) பள்ளி                       ஆ) மன்றம்                                இ) குடிசை                                          ஈ) அம்பலம்

விடை  : அ) பள்ளி 

5. வாத்தியாருக்குப் பிரதியாகச் செயல்பட்டவர்  ( பக்கம் : 81 )

அ) சட்டாம்பிள்ளை       ஆ) வேத்தான்             இ) ஆசிரியர்                   ஈ) இவர்களில் யாரும் இல்லை

விடை  : அ) சட்டாம்பிள்ளை    

6. ‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ என்ற வரி இடம்பெற்ற நூல்  ( பக்கம் : 82  )

அ) தமிழ்விடு தூது        ஆ) சிந்தாமணி        இ) நன்னூல்                    ஈ) தொல்காப்பியம்

விடை  : ஆ) சிந்தாமணி   

7. வாதம் செய்தல் பற்றி கூறும் நூல்  ( பக்கம் : 84  )

அ) மதுரைக்காஞ்சி       ஆ) சிந்தாமணி       இ) தமிழ்விடு தூது     ஈ) நன்னூல்

 விடை  : அ) மதுரைக்காஞ்சி

8. ‘என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு’ என்று கூறும் நூல்  ( பக்கம் : 85  )

அ) நன்னூல்          ஆ) தமிழ்விடு தூது              இ) மதுரைக்காஞ்சி           ஈ) திருக்குறள்

விடை  :    ஈ) திருக்குறள்

9. ஓதற்பிரிவு பற்றி கூறும் இலக்கண நூல்  ( பக்கம் : 85 )

அ) நன்னூல்        ஆ) தொல்காப்பியம்          இ) காரிகை               ஈ) தண்டியலங்காரம்

விடை  :  ஆ) தொல்காப்பியம்  

10.ஓதற்பிரிவுக்கான கால அளவு  ( பக்கம் : 86 )

அ) 7 ஆண்டுகள்       ஆ) 5 ஆண்டுகள்              இ) 3 ஆண்டுகள்           ஈ) 6ஆண்டுகள்

விடை  :      இ) 3 ஆண்டுகள்

11. தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதர்  ( பக்கம் : 86 )

அ) சதாசிவ பண்டாரத்தார்                                      ஆ) சர்வசிவ பண்டிதர் 

இ) குமாரசாமி வாத்தியார்                                         ஈ) நடேசனார்

விடை  : ஆ) சர்வசிவ பண்டிதர் 

12. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகமிருந்தன  ( பக்கம் : 81 - நுழையும் முன் )

அ) 18 - ஆம் நூற்றாண்டு                                           ஆ) 16 -ஆம்  நூற்றாண்டு 

இ) 17-  ஆம் நூற்றாண்டு                                                ஈ) 19 - ஆம் நூற்றாண்டு

விடை  :   ஈ) 19 - ஆம் நூற்றாண்டு

13. மன்றத்திற்கு வழங்கும் இன்னொரு பெயர்  ( பக்கம் : 81  )

அ) சபை                 ஆ) அரண்மனை                   இ) அம்பலம்                                  ஈ) வீடு

விடை  :     இ) அம்பலம்         

14. ஆசிரியரின் வீட்டை எப்படி அழைப்பர்  ( பக்கம் : 80 )

அ) மடம்                        ஆ) மன்றம்                              இ) குடில்                                  ஈ) குருகுலம்

விடை  :    ஈ) குருகுலம்

15. மனனம் செய்வதற்கு எனக்  கதைப்பாடல் குறிப்பிடும் சுவடி  ( பக்கம் : 83 )

அ) கந்தன் சுவடி            ஆ) பிரபாவதி சுவடி          இ) ஆத்திச்சூடி        ஈ) எந்திரன் சுவடி 

விடை  : ஆ) பிரபாவதி சுவடி

16. நெடுங்கணக்கு என்பது ( பக்கம் : 82 ) 

அ) நீண்ட கணக்கு      ஆ) கணிதம்             இ) பெருக்கல் கணக்கு        ஈ) அரிச்சுவடி

விடை  : ஈ) அரிச்சுவடி

17. ஜைன மடங்களின் இன்னொரு பெயர் ( பக்கம் : 81 ) 

அ) பள்ளி                           ஆ) திண்ணை       இ) கல்லூரி                                     ஈ) மேடை

விடை  : அ) பள்ளி               

18. தலைமை வகிக்கும் மாணவனைக்  குறிப்பிடும் சொல்  ( பக்கம் : 82 )

அ) பெரியவன்              ஆ) சட்டாம்பிள்ளை                    இ) சட்டம்பி             ஈ) வேத்தான்

 விடை  :   ஆ) சட்டாம்பிள்ளை          

19. ‘அக்ஷராப்பியாசம்’ என்பது எதனைக் குறிக்கும்  ( பக்கம் : 81 )

அ) மனப்பாடம் செய்தல்                                          ஆ) எழுதுதல் 

இ) சுவடி எழுதுதல்                                                          ஈ) எழுத்தறிவித்தல்

விடை  :     ஈ) எழுத்தறிவித்தல்

20.  எழுத்தாணிக்கு  வழங்கும் வேறு பெயர்  ( பக்கம் : 83 )

அ) எழுதுகோல்                     ஆ) ஊசி                            இ) தூவல்                                   ஈ) பேனா கத்தி

விடை  : ஆ) ஊசி          

21. சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவி  ( பக்கம் : 84 )

அ) நாராசம்                          ஆ) தூக்கு                             இ) கிளி மூக்கு                      ஈ) பனையேடு 

விடை  :  ஆ) தூக்கு

22. “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் 

        மிஞ்சப்  புகட்ட மிக வளர்ந்தாய்”  எனக்  குறிப்பிடும் நூல் எது?  ( பக்கம் : 82 )

அ) தமிழ்விடு தூது                                      ஆ) பிள்ளைத்தமிழ் 

இ) மனோன்மணியம்                                ஈ) சிலப்பதிகாரம் 

விடை  : அ) தமிழ்விடு தூது 

23. எழுத்தாணிகள்  எத்தனை வகைப்படும் ( பக்கம் : 83 ) PTA -1 

அ)  2                                      ஆ) 3                                  இ) 4                                            ஈ) 5

விடை  :    ஆ) 3        

24. கல்விப் பயிற்சி என்பது  ( பக்கம் : 81 )PTA -3

அ) வித்தியாரம்பம்      ஆ) வித்தியாப் பியாசம்         இ)  அக்‌ஷராப்பியாசம்        ஈ) நவத்வீபம்

விடை  : ஆ) வித்தியாப் பியாசம்         

25. மேல்வாயிலக்கம் என்பதன் பொருள்  ( பக்கம் : 81 ) PTA -5

அ) கல்விப் பயிற்சி                                                                  ஆ) பெருக்கல் வாய்ப்பாடு 

இ) பின்ன எண்களின் கீழ்த்தொகை                           ஈ) பின்ன எண்களின்  மேல் தொகை

 விடை  :      ஈ) பின்ன எண்களின்  மேல் தொகை 

26. சீதாள பத்திரம் என்பது ( பக்கம் : 81 ) 

அ) தாழைமடல்           ஆ) நெல் தாள்                  இ) கம்பந்தட்டை                       ஈ) பனையோலை 

விடை  :  அ) தாழைமடல் 

27. மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத்  தமிழில் மொழிபெயர்த்தவர்  ( பக்கம் : 80 )

அ) பா. சுப்ரமணியன்                                                   ஆ) ஆர்.வேங்கடசாமி        

இ)  நாராயணசாமி                                                            ஈ) மா. ராசமாணிக்கனார்

விடை  :  அ) பா. சுப்ரமணியன்          

28. ‘ இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை’ என்ற நூலின் ஆசிரியர்  ( பக்கம் : 80 )

அ) நாவலர் சோமசுந்தர பாரதியார்                    ஆ)  பேராசிரியர் 

இ) அ .கா. பெருமாள்                                                             ஈ) வ.சுப.மாணிக்கம்

விடை  :   இ) அ .கா. பெருமாள்    

29. கல்விப் பயிற்சி  என்பது  ( பக்கம் : 81- தெரிந்து தெளிவோம் பகுதி )

அ) வித்தியாப்பியாசம்       ஆ) நவத்வீபம்         இ) அக்ஷராப்பியாஸம்                 ஈ) வித்தியாரம்பம் விடை  : அ ) வித்தியாரம்பம்

30. மாணவர்களுக்குக்  கற்பித்த நூல்களைப்  பட்டியலிடும் நூல் எது?   ( பக்கம் : 83 )

அ) கதைப்பாடல்                   ஆ) பிரபாவதி சுவடி               இ) மூதுரை                               ஈ) நல்வழி

 விடை  :     ஆ) பிரபாவதி சுவடி    

31. இரட்டைத் துளையுள்ள  ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியை செருகி கட்டுவார்கள். இந்த முறையை எவ்வாறு அழைப்பர்  ( பக்கம் : 83 )

அ) கிளி மூக்கு                   ஆ) தூக்கு                                     இ) நாராசம்                            ஈ) சீதாள பத்திரம்

விடை  :  இ) நாராசம்       

32. “வினாதல் வினாயவை  விடுத்தல்  என்றிவை 

          கடனாக் கொளினே  மடநனி இகக்கும்” என்று கூறும் நூல்  ( பக்கம் : 82 )

அ) நன்னூல்                 ஆ) தொல்காப்பியம்                 இ) காரிகை                      ஈ) தண்டியலங்காரம்

 விடை  : அ) நன்னூல் 

33. ‘தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்டவர்  ( பக்கம் : 85 )

அ)உ. வே. சாமிநாதர்                                                           ஆ)  நாராயணசாமி 

இ) நாவலர் சோமசுந்தர பாரதியார்                          ஈ) வேங்கடசாமி

விடை  :  அ)உ. வே. சாமிநாதர்        

34. பண்டைய காலத்துப்  பள்ளிக்கூடங்கள் என்ற பாடப்பகுதி எத்தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது  ( பக்கம் : 85 )

அ) உயிர் மீட்சி                                                                             ஆ) திராவிட வித்தியா பூஷணம் 

இ) உ. வே. சா. கட்டுரைகள்                                                    ஈ) உயிர் நீர் 

விடை  :  அ) உயிர் மீட்சி

35.  உ. வே. சாமிநாதர்  திருவுருவச்சிலை இடம்பெற்றிருக்கும் கல்லூரி ( பக்கம் : 85 )

அ) பச்சையப்பன் கல்லூரி                                                       ஆ) சென்னை மாநிலக் கல்லூரி  

இ) எத்திராஜ் கல்லூரி                                                                     ஈ) இவற்றில் எதுவுமில்லை 

விடை  :  ஆ) சென்னை மாநிலக் கல்லூரி

36. உ .வே. சாமிநாதர்  பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம்  ( பக்கம் : 85 )

அ) திருவான்மியூர்          ஆ) பூந்தமல்லி           இ) கோடம்பாக்கம்                    ஈ) காஞ்சிபுரம்

விடை  : அ) திருவான்மியூர்   

37. தாக்ஷிணாத்திய  கலாநிதி என அழைக்கப்படுபவர்  ( பக்கம் : 85 )

அ) சுரதா           ஆ) மறைமலையடிகள்               இ) உ. வே. சாமிநாதர்              ஈ) அருணகிரியார்

விடை  : இ) உ. வே. சாமிநாதர்   

38. கல்வியில் வாதம் செய்தலோடு  நூற்பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து கல்வி திறமையை வெளிப்படுத்துவர் என கூறும் நூல்  ( பக்கம் : 84 ) 

அ) பட்டினப்பாலை                              ஆ) சிறுபாணாற்றுப்படை 

இ) மதுரைக்காஞ்சி                                ஈ) நெடுநல்வாடை

விடை  : இ) மதுரைக்காஞ்சி   

39. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற சொற்பொழிவு எந்த  இதழில் வெளிவந்தது ( பக்கம் : 80 )

 அ) நடை                                    ஆ) எழுத்து                           இ) காவியம்                           ஈ) சுதேசமித்திரன்

விடை  : ஈ) சுதேசமித்திரன்

40.  உ. வே. சா. வின் சிறப்புப் பெயர் ( பக்கம் : 85 )

அ)  தமிழ் வேந்தன்         ஆ) இலக்கியச் செம்மல்       இ) தமிழ்த்தாத்தா            ஈ)  தமிழ் நாவலர்

 விடை : இ) தமிழ்த்தாத்தா

41.”புலமைப்  பெருங்கடல்”  என்று அழைக்கப்படுபவர்.  ( பக்கம் : 85 )

அ) வாணிதாசன்           ஆ) கம்பர்                  இ) உ.வே.சாமிநாதர்                                  ஈ) சுரதா

 விடை  : இ) உ.வே.சாமிநாதர்     

 42. ஓதல் பிரிவு பற்றி கூறும் இலக்கண நூல்  ( பக்கம் : 85 )

அ) நன்னூல்         ஆ) தண்டியலங்காரம்          இ) தொல்காப்பியம்                  ஈ) வீரசோழியம்

விடை  : இ) தொல்காப்பியம்  

 43. தமிழ்க் கல்லூரியாகவும் வடமொழி கல்லூரியாகவும்  விளங்கிய மடங்கள்  ( பக்கம் : 855 )

அ) மதுரை மடம் ,காஞ்சிமடம்                                      ஆ) காஞ்சிமடம், திருச்சி மடம் 

இ) திருவாடுதுறை மடம் , தருமபுர மடம்               ஈ) திருவையாறு மடம் , தருமபுரம் மடம் 

விடை  :  இ) திருவாடுதுறை மடம் , தருமபுரம் மடம்

44. பிரதேசத்து மாணாக்கர்கள் தஞ்சை சர்வசிவ பண்டிதர் என்பார் இடத்தில் கல்வி கற்று சென்ற காலம்  ( பக்கம் : 85 )

அ) முதல் இராஜராஜ சோழன் காலம்                            ஆ) இரண்டாம் இராஜராஜ சோழன் காலம் 

இ) இராசேந்திரன் காலம்                                                            ஈ) இரண்டாம் புலிகேசியின் காலம் 

விடை  :  அ) முதல் ராஜராஜ சோழன் காலம்

45. மௌன குருவிடம் கல்விப் பயின்றவர்  ( பக்கம் : 80 )

அ) ப.சுப்ரமணியனார்                                                          ஆ) மா. இராசமாணிக்கனார் 

இ) வேங்கடசாமி                                                                           ஈ) நாராயணசாமி

விடை  :   ஆ) மா. இராசமாணிக்கனார் 

46. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ளவை  ( பக்கம் : 83 )

அ) மடக்கெழுத்தாணி        ஆ) வாரெழுத்தாணி        இ) குண்டெழுத்தாணி        ஈ) பேனா கத்தி 

விடை  : அ) மடக்கெழுத்தாணி


சரியா ?  தவறா ? 

1.கூற்று :  பள்ளிக்கு முதலில் வருபவனை வேத்தான் என்று அழைப்பர்..

 கூற்று : வேத்தான் சட்டாம்பிள்ளைக்கு உரிய  கடமையைச்  செய்வான்.

 அ) கூற்று  இரண்டும் தவறு                                          ஆ) கூற்று ஒன்று சரி இரண்டு தவறு 

இ) கூற்று இரண்டும் சரி                                                        ஈ) கூற்று ஒன்று தவறு இரண்டு சரி

விடை  :       ஆ) கூற்று ஒன்று சரி இரண்டு தவறு 

2. கூற்று :  ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தின் அடியே மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் 

விளக்கம்:  மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை.  

அ) கூற்று  சரி விளக்கம் தவறு                                                ஆ) கூற்று  தவறு விளக்கம் சரி 

இ) கூற்று  சரி விளக்கம் சரி                                                            ஈ) கூற்று தவறு விளக்கம் தவறு

 விடை  : இ) கூற்று  சரி விளக்கம் சரி           


 சரியானதைத் தேர்க 

1.                அ) வித்யாரம்பம்                           -  எழுத்துப்பயிற்சி

                   ஆ) சீதாளபத்திரம்                        -  தாழை மடல்

                  இ) அக்ஷராப்பியாசம்                  -  கல்விப் பயிற்சி

                   ஈ) வித்தியாப்பியாசம்                -  கல்வித்தொடக்கம்

விடை  : ஆ) சீதாளபத்திரம்    -  தாழை மடல்


2.               அ) எழுத்துப் பயிற்சி                                                     -  வித்யாரம்பம்

                  ஆ) பின்ன எண்ணின் கீழ்த்தொகை              -  கீழ்வாயிலக்கம்

                  இ)  கணக்காயர்                                                                   -  கணக்குப்பிள்ளை 

                   ஈ) கல்விப் பயிற்சிக் கூடம்                                          -  நவத்வீபம்

விடை  : ஆ) பின்ன எண்ணின் கீழ்த்தொகை              -  கீழ்வாயிலக்கம்

 3.             அ) ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் என்பது மணிமேகலை.  

                  ஆ) மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்ச புகட்ட மிக வளர்த்தாய் 

                           என்பது சிலப்பதிகாரம்..

                 இ) நெடுங்கணக்கை  ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் மாணக்கர் கற்றனர்..

                 ஈ) பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின்  நிலையிலிருந்தது.

விடை  :  ஈ) பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின்  நிலையிலிருந்தது.

4.             அ) வேத்தான்                                                                     -  வகுப்புத் தலைவன்

                 ஆ) சட்டாம்பிள்ளை                                                      -  பள்ளிக்கு முதலில் வருபவன்

                  இ) அரசாணை                                                                 -  சாசனம்

                   ஈ) நவத்வீபம்                                                                     -  ஆசிரியருக்கு வழங்கும் வேறு பெயர்

விடை  : ஈ) நவத்வீபம்                                                                     -  ஆசிரியருக்கு வழங்கும் வேறு பெயர்


 சரியான நிறுத்தற்குறி உடைய தொடரினைத்  தேர்க


1.        அ) “குழிமாற்று”,  எந்தத்  துறையோடு தொடர்புடைய சொல். 

           ஆ) ‘குழிமாற்று’,  எந்தத்  துறையோடு தொடர்புடைய சொல்!

           இ) ‘குழிமாற்று’  எந்தத்  துறையோடு தொடர்புடைய சொல்.

            ஈ) குழிமாற்று எந்தத்  துறையோடு தொடர்புடைய சொல்?

விடை  : இ) ‘குழிமாற்று’  எந்தத்  துறையோடு தொடர்புடைய சொல்

2.         அ) “உ. வே. சா. இணையற்ற ஆசிரியர்”; புலமைப்  பெருங்கடல் சிறந்த 

            எழுத்தாளர்     பதிப்பாசிரியர் பழந்தமிழ் இலக்கியங்களைப்  பதிப்பித்தவர்..

            ஆ) “உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்;  புலமைப்  பெருங்கடல்;  சிறந்த 

             எழுத்தாளர்;  பதிப்பாசிரியர்;  பழந்தமிழ் இலக்கியங்களைப்  பதிப்பித்தவர்.”

            இ) உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப்  பெருங்கடல்; சிறந்த 

            எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; பழந்தமிழ் இலக்கியங்களைப்  பதிப்பித்தவர்.

           ஈ) உ .வே.சா. இணையற்ற ஆசிரியர்,  புலமைப்  பெருங்கடல் , சிறந்த 

            எழுத்தாளர்,  பதிப்பாசிரியர்,  பழந்தமிழ் இலக்கியங்களைப்  பதிப்பித்தவர்..

விடை  :    இ) உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப்  பெருங்கடல்; சிறந்த 

            எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; பழந்தமிழ் இலக்கியங்களைப்  பதிப்பித்தவர்.


3.       அ)  “மாணவர்கள்”,  கீழ்வாயிலக்கம்,  மேல்வாயிலக்கம்,  குழிமாற்று,  நெல் இலக்கம் 

           முதலிய வாய்ப்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும். 

           ஆ) மாணவர்கள்,  கீழ்வாயிலக்கம்,  மேல்வாயிலக்கம்,  குழிமாற்று,  நெல் இலக்கம் 

           முதலிய  வாய்ப்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும் 

           இ) மாணவர்கள் கீழ்வாயிலக்கம்,  மேல்வாயிலக்கம்,  குழிமாற்று,  நெல் இலக்கம் 

           முதலிய வாய்ப்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும். 

          ஈ) ‘மாணவர்கள், கீழ்வாயிலக்கம் , மேல்வாயிலக்கம்,  குழிமாற்று , நெல் இலக்கம் 

          முதலிய வாய்ப்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும்’ 

விடை  : இ) மாணவர்கள் கீழ்வாயிலக்கம்,  மேல்வாயிலக்கம்,  குழிமாற்று,  நெல் இலக்கம் 

           முதலிய வாய்ப்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும். 

 4.  அ) மடக்கெழுத்தாணி  வாரெழுத்தாணி,  குண்டெழுத்தாணி  என்பன எழுத்தாணியின்  வகைகள்.

       ஆ) மடக்கெழுத்தாணி,  வாரெழுத்தாணி,  குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின்  வகைகள். 

         இ)  ‘மடக்கெழுத்தாணி  வாரெழுத்தாணிகுண்டெழுத்தாணி’ என்பன எழுத்தாணியின்  வகைகள்.

        ஈ)  “மடக்கெழுத்தாணி  வாரெழுத்தாணி குண்டெழுத்தாணி”  என்பன, எழுத்தாணியின்  வகைகள்.

விடை  :   ஆ) மடக்கெழுத்தாணி,  வாரெழுத்தாணி,  குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின்  வகைகள்

பொருந்தாததைத்  தேர்க

1.      அ) மணல்                           -   சிலேட்

          ஆ) பனையேடு               -   புத்தகம்

           இ) எழுத்தாணி                -   பேனா

            ஈ) அசை                                 -   கயிறு

விடை  :  ஈ) அசை                                 -   கயிறு

 2.          அ)  கொம்பு                          -    வரி  எழுத்தின் வகை

              ஆ) மூன்று வருடம்        -   ஓதல் பிரிவு

              இ ) தலை மாணவன்    -   சட்டாம்பிள்ளை

              ஈ) முறை வைப்பது         -   பலரும் சேர்ந்து சொல்வது

விடை  :     அ)  கொம்பு                          -    வரி  எழுத்தின் வகை

 3.            அ) எட்டயபுரம் திண்ணைப்பள்ளி                    -   சோமசுந்தர பாரதியார்

                  ஆ) கணபதி திண்ணைப்பள்ளி                       -   பாலசுப்ரமணியனார்

                  இ) முத்துராம பாரதி திண்ணைப்பள்ளி     -   பின்னத்தூர் நாராயணசாமி

                  ஈ) பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளி         -   மா. இராசமாணிக்கனார்

விடை  : ஈ) பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளி         -   மா. இராசமாணிக்கனார்


 4.         அ)  நவத்வீபம்                                              -   வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

              ஆ)  குழிமாற்று                                           -   பெருக்கல் வாய்ப்பாடு 

              இ)  மேல்வாயிலக்கம்                            -    பாடலாகப் பாடுகின்ற மரபு முறை

               ஈ) பிரபாவதி சுவடி                                    -   மனப்பாடம் செய்ய பயன்படும் நூல்

விடை  :    இ)  மேல்வாயிலக்கம்                            -    பாடலாகப் பாடுகின்ற மரபு முறை


 பொருத்தித்   தேர்க

  1 .                  அ) அம்பு போல் கால்கள்                            -  1.   வரியெழுத்தின்  உறுப்பு

                        ஆ) கொம்பு சுழி                                                   -  2.   சாயாமல்

                        இ) கொம்பு                                                                -  3.   அசையாமல்

                        ஈ) கொண்ட பந்தி                                                -  4.  கோணாமல்

அ) 3 1 4 2                                    ஆ) 3 2  1 4                                      இ) 3 4 1 2                                                   ஈ) 3 4 2 1 

விடை  :   இ) 3 4 1 2    

 2.                    அ) ஓலைச்சுவடி                              -  1.   நெடுங்கணக்கு

                         ஆ) அரிச்சுவடி                                    -  2.  சாசனம் 

                         இ) வகுப்புத் தலைவன்                 -  3.   தூக்கு 

                         ஈ) அரசாணை                                     -  4.   சட்டாம்பிள்ளை

அ) 3 4 2 1                                      ஆ) 3 1 4 2                                      இ) 4 3 2 1                                                  ஈ) 3 4 1 2 

விடை  :   ஆ) 3 1 4 2     

3.                 அ)  சீதாள பத்திரம்                                       -  1.   பெருக்கல் வாய்ப்பாடு

                    ஆ)  குழிமாற்று                                                -  2.   தாழைமடல் 

                    இ)   அக்ஷராப்பியாஸம்                             -  3.   ஆசிரியர் 

                    ஈ)  கணக்காயர்                                                 -  4.  எழுத்துப் பயிற்சி

அ) 2 1 4 3                                           ஆ) 2 4 3 1                                       இ) 2 1 3 4                                         ஈ) 4 3 2 1 

விடை  : அ) 2 1 4 3       


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095


12 ஆம் வகுப்பு

இயல் - 4

உரைநடை     : பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

one word Questions PDF DOWNLODE 👇👇👇👇


         








10 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here


12 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here

12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
14 Mark - மொழிப்பயிற்சி -
இலக்கணம் PDF DOWNLODE : Click Here




11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here


11 ஆம் வகுப்பு

இயல் - 5

சீறாப்புராணம் 

1 Mark questions

ONLINE TEST எழுத : Click Here

சீறாப்புராணம் 

1 Mark questions (75) Pdf : Click Here

சீறாப்புராணம் 
BOOK BACK QUESTIONS : Click Here
சீறாப்புராணம் 
SLIP TEST QUESTIN & ANSWER : Click Here



12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here




 

©L3MØÑÃDÊ 360

Image by adriankirby from Pixabay 
 





 


Post a Comment

Previous Post Next Post