Loading ....

12th Standard -Tamil -Study Material -EYAL 4 -SLIP TEST- இயல் 4-QUESTIONS-ANSWERS

<


12th Standard -Tamil -Study Material -EYAL 4 -SLIP TEST- இயல் 4-QUESTIONS-ANSWERS

     


 தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கானஇரண்டாம் திருப்புதல் தேர்வில்V12th standard-Second Revision exam - march 2022  இடம்பெற இருக்கின்ற பகுதிக்கான வினா-விடைகளில் ,இயல் -4- EYAL 4 -இன் - SLIP TEST - SLIP TEST -1- QUESTINS ANSWERS

இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் 12th standard-Second Revision exam - March 2022 நிச்சயமாக உங்களால் அதிக மதிப்பெண் பெற முடியும் . அதற்கு இயல் -4- EYAL 4 -இன் - SLIP TEST - SLIP TEST -1- QUESTINS ANSWERS இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இயல் -4- EYAL 4 -இன் - SLIP TEST - SLIP TEST -1- QUESTINS ANSWERS இந்தக் கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் அதிக மதிப்பெண் பெற முடியும் .

தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -march 2022 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

  தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard-Second Revision exam - March 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இயல் -4- EYAL 4 -இன் - SLIP TEST - SLIP TEST -1- QUESTINS ANSWERS நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A. Jelestin                                               

12 ஆம் வகுப்பு  -   தமிழ்                                                              

இயல் - 4                                                                                                                        SLIP TEST - 1

நேரம் : 25 நிமிடம்                                                                                                                                            மதிப்பெண் : 20 

I.  பலவுள் தெரிக                                                                                                                                                      6 X 1 = 6 

1. வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம் பொருத்தமான சீரினைக்  கொண்டு  கோடிட்ட இடங்களை நிரப்புக.(பக் : எண் : 100)

வெண்ணிலவு____________(  காய்கிறது  /  ஒளிர்கிறது)

2.பொருத்துக (பக் : எண் : 100)

அ) மாச்சீர்                   -  1. கருவிளம், கூவிளம்  

ஆ) காய்ச்சீர்               -  2. நாள் மலர் 

இ) விளச்சீர்                 -  3. தேமாங்காய் புளிமாங்காய் 

ஈ) ஓரசைச்சீர்             -  4. தேமா புளிமா

அ) 1 2 4 3                  

ஆ) 4 3 1 2             

இ) 2 3 1 4                       

ஈ) 3 4 2 1

3. சுரதா நடத்திய கவிதை இதழ் (பக் : எண் : 101)

அ) இலக்கியம்               

ஆ) காவியம்             

இ) ஊர்வலம்                              

ஈ) விண்மீன்

4. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க (பக் : எண் : 101)

அ) வசம்பு      

ஆ) மணத்தக்காளியிலைச்சாறு      

இ) கடுக்காய்      

ஈ) மாவிலைக்கரி

5.“விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற 

       வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” -  இத்தொடர் தரும்  முழுமையான பொருள் 

அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு        

ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு 

இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு 

ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர் ,முகில் அனைத்தும் வேறு வேறு

6. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்  (பக் : எண் : 101)

அ) இலக்கியம்              

ஆ) கணிதம்                  

இ) புவியியல்                        

ஈ) வேளாண்மை

II. குறுவினா( எவையேனும்  இரண்டனுக்கு மட்டும்)                                                                2 X 2 = 4  

7. வசனம், கவிதை வேறுபாடு தருக 

8. அக்காலத்தில் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை  ?

9. வெண்பாவிற்குரிய தளைகள்  எவை ?

10. வெண்பாவின் அடிவரையறை  கூறுக


III. சிறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும்)                                               2 X 4 = 8 

11.நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர் ?

12. . மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

13 . ‘ விண்வேறு ‘- எனத் தொடங்கும் இதில் வெற்றி பெற  என்னும் பாடல் 

14.  ‘ எழுத்தாணி’   - குறிப்புத் தருக. 




                                     12 ஆம் வகுப்பு  -   தமிழ்                                    REDUCED 

இயல் - 4                                                                                                                        SLIP TEST - 1

நேரம் : 25 நிமிடம்                                                                                                                                         மதிப்பெண் : 20 

விடைகள்

I.  பலவுள் தெரிக                                                                                                                                                      6 X 1 = 6 

1. காய்கிறது

2. ஆ) 4 3 1 2

3.  ஆ) காவியம்

4. இ) கடுக்காய்

5. ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர் ,முகில் அனைத்தும் வேறு வேறு

6.  ஆ) கணிதம்

II. குறுவினா( எவையேனும்  இரண்டனுக்கு மட்டும்)                                                                2 X 2 = 4  

7. வசனம்:  

சொற்களைச் சேர்க்கும்போது எதுகை, மோனை போன்றவற்றை அமைக்காமல், அடியளவும்  இல்லாமல் எழுதுகின்ற இலக்கிய வடிவம் வசனம்.

கவிதை: 

சொற்களைச் சேர்க்கும் போது யாப்பு முறைப்படி எதுகை , மோனை போன்ற தொடைகளைச் சேர்த்து குறளடி ,சிந்தடி,அளவடி ,நெடிலடி கழிநெடிலடி போன்ற அடியளவை அறிந்து வார்த்தைகளை அமைப்பதே கவிதை ஆகும்.

8. அக்காலத்தில் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள்:

  • நிகண்டு, நன்னூல் ,காரிகை ,தண்டியலங்காரம், நீதிநூல்கள். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்.. 

  • கணிதத்தில் கீழ்வாயிலக்கம் ,மேல்வாயிலக்கம்  , குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள் போன்றவை அக்காலத்துக் கல்வி முறையில் மனனப்  பயிற்சிக்கு உதவிய நூல்கள் ஆகும்.

9. வெண்பாவிற்குரிய தளைகள்:

இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை 

10. வெண்பாவின் அடிவரையறை: 

         1. இரண்டடி வெண்பா                                                            -   குறள் வெண்பா 

        2. மூன்றடி வெண்பா                                                                -   நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பா 

        3. நான்கடி வெண்பா                                                               -    நேரிசை , இன்னிசை வெண்பா                                                           

        4. நான்கடி முதல் பன்னிரண்டு அடி வரை            -   பஃறொடை வெண்பா                 

        5. பன்னிரண்டு அடிகளுக்கு மேல்                               -   கலி வெண்பா

III. சிறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும்)                                               2 X 4 = 8 

11.    நான் ஆசிரியரானால்...                                 

  •  மாணாக்கர்களில் எல்லோரும் ஒரே கற்றல் அடைவு பெறும் மாணவர்கள் என்ற கருத்தியல் ரீதியான என் எண்ணத்தை முதலில் மாற்றுவேன்.

  •  மாணாக்கர்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவு திறன் மனப்பாங்கு பண்புகள் இருக்கப்போவதில்லை எனவே மாணவர்களை ஒப்பிட்டுக் கூற மாட்டேன். 

  •  மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களின் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அறிந்து அவனை தேற்றிவிடுவேன்.

  •  மாணாக்கர்கள் நல்ல நிலையை அடைய சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். 

  •  மாணாக்கர்களிடம் தகாத வார்த்தைகள் மற்றும் தேவையற்ற வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். 

  • என் வகுப்பு மாணவர்களை மாணவர்களுக்குரிய கண்ணியத்துடன் நடத்துவேன். 

  • மாணாக்கர்களின் குடும்பச் சூழலை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் ஆசானாய் இருப்பேன். 

  • மாணாக்கர்களுக்கு முரண்பாடாகவோ,  எதிர்த்து நின்று செயல்படவோ அவர்களை அடித்து துன்புறுத்தவோ  அவர்கள் மனம் வேதனை அடையும் செயல்களில் ஈடுபடவோ  ஒருபோதும் விரும்ப மாட்டேன்.

12. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் : 

  • ஆசிரியர் முதலில் மாணாக்கர்களின் வலக்கை ஆள்காட்டி விரலைப்  பிடித்துத்  தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுதிக் காட்டுவார்.  

  • மணலில் எழுத்தின் வரிவடிவை  எழுதுவார்.  

  • மாணாக்கர் ஒலி வடிவை நன்றாகத்  தெரிந்த பின்புதான் வரிவடிவை  ஓலையில் வரைந்து காட்டுவார்.  

  • ஓலையை இடக் கையில் பிடித்து வலக் கையால் எழுத்தாணி கொண்டு எழுத கற்றுக் கொடுப்பார் .  

  • எழுத்தாணி பிடித்து எழுதும் போது ஓலையை நகர்த்துவார்.  

  • எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே  வரையும்.  

  • ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றொரு எழுத்து படாமலும் ஒருவரியின் மீது மற்றொருவரி  இணையாமல்  போதிய இடம்விட்டு எழுதுவார்கள்.  

  • கல்வெட்டுகளில் கல் தச்சர்கள் சிற்றுளி கொண்டு எழுத்துக்களைப்  பொறித்தனர்.  

  • களிமண் பலகையில் எழுத்தாணி கொண்டு எழுதினர்.  

  • எழுத்துக்களின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. 

  • காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப்  பயன்படுத்திக்  காகிதங்களில் எழுதும் முறையைக்  கற்றுக் கொண்டனர்.  

  • காகிதங்களில் எழுதும்போது கையை நகர்த்தி எழுதுவர்.

13 . ‘ விண்வேறு ‘- எனத் தொடங்கும் ‘இதில் வெற்றி பெற’என்னும்  பாடல் 

                             விண்வேறு;  விண்வெளியில் இயங்கு கின்ற 

                                             வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு ;  

                             மண்வேறு;  மண்ணோடு கலந்தி  ருக்கும் 

                                            மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு; 

                            புண்வேறு;  வீரர்களின் விழுப்புண்  வேறு;  

                                            புகழ்வேறு; செல்வாக்கு  வேறு;  காணும் 

                            கண்வேறு;  கல்விகண்   வேறு;  கற்றார் 

                                            கவிநடையும்  உரைநடையும் வேறு  வேறு. 

14. எழுத்தாணி :  

  • ஓலையில் எழுதுவதற்குரிய   எழுத்தாணியை ஊசி என்றும் கூறுவர்.  

  • எழுத்தாணி, மடக்கெழுத்தாணி வாரெழுத்தாணி ககுண்டு எழுத்தாணி என பலவகை இருந்துள்ளது.  

  • ஒரு பக்கம் வாருவதற்குக்  கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் உடைய எழுத்தாணிகள் இருந்துள்ளன.  

  • ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கு எழுத்தாணியும் இருந்துள்ளன.  

  • ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக 20 முதல்  30  வரி வரையிலும் எழுதுவதற்குரிய  மெல்லிய எழுத்தாணியும் இருந்துள்ளது.





குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095


12 ஆம் வகுப்பு

இயல் - 4

SLIP TEST - 1

QUESTION & ANSWER PDF DOWNLODE

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇




           







10 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here


12 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here

12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
14 Mark - மொழிப்பயிற்சி -
இலக்கணம் PDF DOWNLODE : Click Here




11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here


11 ஆம் வகுப்பு

இயல் - 5

சீறாப்புராணம் 

1 Mark questions

ONLINE TEST எழுத : Click Here

சீறாப்புராணம் 

1 Mark questions (75) Pdf : Click Here

சீறாப்புராணம் 
BOOK BACK QUESTIONS : Click Here
சீறாப்புராணம் 
SLIP TEST QUESTIN & ANSWER : Click Here

12 ஆம் வகுப்பு

இயல் - 4

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

one word Questions & Answers PDF : Click Here



12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE





மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here




 

©L3MØÑÃDÊ 360

Image by JenDigitalArt from Pixabay 






           

 

 


   


Post a Comment

Previous Post Next Post