11th Standard - +1Tamil - Tamil -Study Material - REVISION EXAM QUESTION PAPER -April 2022- MODEL QUESTION PAPER 2 - ANSWER KEY
தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 11 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில்11th standard- Revision exam -April 2022 இடம்பெற இருக்கின்ற தேர்விற்கான Model Question Paper with Answer key இங்குத் தொகுத்து Study Material ஆக தரப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 11 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில் 11th standard- Revision exam -April 2022 இல் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித் தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப் புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது. இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 11 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில்11th standard- Revision exam -March 2022 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற திருப்புதல் தேர்வில் 11th standard- Revision exam -April 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin
REDUCED SYLLABUS
திருப்புதல் தேர்வு -மார்ச் 2022
மாதிரி வினாத்தாள் -2
வகுப்பு - 11
பொதுத்தமிழ்
நேரம் : 3 மணி Ⓒtamilamuthu2020official.blogspot.com மதிப்பெண் : 90
அறிவுரைகள் :
i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும். அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு :
i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. ஒரு திரவ நிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்பட்டுகிறபோது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட , திரவ நிலையில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்து மொழியைத் திட திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியை விட பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்ச மொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
2. திருப்பாவையை ஆண்டாள் எவ்வாறு குறிப்பிடுகின்றார்.
அ) தமிழ்
ஆ) தமிழ்மணம்
இ) தமிழ்அமுதம்
ஈ) தமிழ்மாலை
3. பொருத்தித் தேர்க
அ) அடி அகரம் ஐ ஆதல் - 1. செங்கதிர்
ஆ ) முன் நின்ற மெய் திரிதல் - 2. பெருங்கொடை
இ) ஆதிநீடல் - 3. பைங்கூள்
ஈ) இனமிகல் - 4. காரிருள்
அ) 4 3 2 1
ஆ) 3 4 2 1
இ) 3 1 4 2
ஈ) 1 2 3 4
4. உலக சிட்டுக் குருவிகள் நாள்
அ) மார்ச் 20
ஆ) ஏப்ரல் 20
இ) மே 20
ஈ) பிப்ரவரி 20
5. “இனிதென”- இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
6. கூற்று : “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்
விளக்கம் : கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண் ,கோட்டை என்னும்
பொருள்களும் உண்டு
அ) கூற்று சரி, விளக்கம் தவறு
ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
இ) கூற்று தவறு, விளக்கம் சரி
ஈ) கூற்றும் தவறு , விளக்கமும் தவறு
7. ஒப்புரவு என்பதன் பொருள்_____________
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
8. பெண்களுக்காகப் பாரதியார் எழுதிய குறள் வெண்பா இடம் பெற்ற இதழ்.
அ) இந்தியா
ஆ) நவசக்தி
இ) சக்கரவர்த்தினி
ஈ) சுதேசமித்திரன்
9. மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க
அ) அன்னம், கிண்ணம்
ஆ) டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், லட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்ஙனம்
10. பொருத்தமான இலக்கிய வடிவம் எது ?
அ) ஏதிலிக்குருவிகள் - மரபுக்கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு - சிறுகதை
இ) யானை டாக்டர் - குறும்புதினம்
ஈ) ஐங்குறுநூறு - புதுக்கவிதை
11. ஈரொற்று மெய்ம்மயக்கம் இடம் பெற்றுள்ள சொல்
அ) கப்பல்
ஆ) மகிழ்ச்சி
இ) பட்டம்
ஈ) மார்கழி
12. ’அகிற்புகை’ - இலக்கணக்குறிப்புத் தருக
அ) உம்மைத்தொகை
ஆ) எண்ணும்மை ஆறாம்
இ) ஆறாம் வேற்றுமைத்தொகை
ஈ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
13. ‘களைத்துப்போன கத்திரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது’ என்ற வரி யாருடையது?
அ) பாப்லோ நெரூடா
ஆ) வால்ட் விட்டமின்
இ) மலார்மே
ஈ) எர்னஸ்ட் காசிரர்
14. தொல்காப்பியம் சுட்டும் பள்ளு இலக்கிய வகை யாது?
அ) புலன்
ஆ) விருந்து
இ) வனப்பு
ஈ) உழத்திப்பாட்டு
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. வளரும் காவில் முகில் தொகை ஏறும் - பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும் -அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன ?
16. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை ?
17. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
18. “ஏதிலியாய் குருவிகள் எங்கே போயின” - தொடரின் பொருள் யாது?
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. . “கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
20. . இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையினைக் குறிப்பிடுக
21. பழங்குடியினர் எத்தகைய இயல்புடையவர்கள் ?
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அ) பொரி, பொறி ஆ) கனை, கணை
23. தமிழாக்கம் தருக
அ) Ethnic group ஆ) Ancestor
24. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர் ஆக்குக
அ) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி.
ஆ) ஓர் பயிர் பறவை வளர வேண்டும் அழகான தண்ணீர் மயில்.
25.. ஏதேனும் ஒன்றுக்கு புணர்ச்சி விதி தருக
அ) புகழெனின் ஆ) செங்கயல்
26. வல்லின மெய்களை இட்டும் நீக்கி எழுதுக
அ)பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள் , தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயன் அளிக்கும் என்றும் கருதினார்.
ஆ) தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
27. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
அ) பிண்ணாக்கு ஆ) எட்டுவரை
28. கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக.
அ) சங்கீதம் ஆ) வித்தியா இ) மகாஜனம் ஈ) சாகரம்
29. ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக
அ) முனிவிலர் ஆ) ஈன்ற
30. குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. புகழுக்குரிய குணங்காக நீவிர் கருதுவன யாவை ? புகழின் பெருமையைப் பொதுமறை வழி நின்று கூறுக.
32. “சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
33. இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
கூறும் காரணங்களைக் கூறுக ?
34.சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. கவிஞனிடம் மொழி எப்படி மூவகை நிலையில் செயல்படுகிறது ?
36. “மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்” என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக
38. ‘கோட்டை’ என்ற சொல் திராவிட மொழிகளில் வழங்கும் விதத்தை விவரி ?
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. பிறிதுமொழிதல் அணியை விளக்குக.
அல்லது
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு’ - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
40. தமிழாக்கம் தருக.
அ) Culture does not make people. People make culture.
ஆ) A nation’s culture resides in the hearts and in the soul of its people.
இ) Roads were made for journeys not destinations.
ஈ) Look deep into nature and then you will understand everything better.
41. கீழ்க்ணும் பாடலைப் படித்து மையக்கருத்து எழுதி, ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக
மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே!
வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
வாடி வாடிப் போவதேனோ ? வெண்ணிலாவே !
கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
கூட்டினில் உறங்குவாயோ ? வெண்ணிலாவே !
பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும்
பாரில் வர அஞ்சினையோ வெண்ணிலாவே !
- கவிமணி
42. ‘ஓடு’ என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகிய தொடர்களை அமைக்க.
43. ‘பண்பாட்டைப் பாதுகாப்போம் பகுத்தறிவைப் போற்றுவோம்’ என்னும் பொருள்பட ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. 3x6=18
44. அ) கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம் வழி நிறு.
அல்லது
ஆ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.
45.அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க
அல்லது
ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இணைந்தே இருந்தன- கூற்றினை மெய்ப்பிக்க
46. அ) பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை ?
அல்லது
ஆ) வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துக்களை விளக்குக.
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக
அ) “ ஏடு தொடக்கி “ - எனத் தொடங்கும் பாடலை எழுதுக
ஆ) ‘படின்’ - என முடியும் திருக்குறளை எழுதுக.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
REDUCED SYLLABUS
திருப்புதல் தேர்வு -மார்ச் 2022
மாதிரி வினாத்தாள் -2
இயல் : 1 , 2, 3, 4
வகுப்பு - 11
பொதுத்தமிழ்
Ⓒtamilamuthu2020official.blogspot.com நேரம் : 3 மணி மதிப்பெண் : 90
விடைகள்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. இ) எழுத்துமொழியை விட பேச்சுமொழி எளிமையானது.
2. ஈ) தமிழ்மாலை
3. இ) 3 1 4 2
4. அ) மார்ச் 20
5. அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
6. ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
7. இ) ஊருக்கு உதவுவது
8. இ) சக்கரவர்த்தினி
9. அ) அன்னம், கிண்ணம்
10. இ) யானை டாக்டர் - குறும்புதினம்
11. ஆ) மகிழ்ச்சி
12. இ) ஆறாம் வேற்றுமைத்தொகை
13. அ) பாப்லோ நெரூடா
14. அ) புலன்
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. தென்கரை நாட்டில் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும் என்பதே இவ்வரி உணர்த்தும் பொருளாகும்.
16. செயலின் வலிமை , தன் வலிமை, பகைவனின் வலிமை, தனக்குத் துணையாக இருப்பவரின் வலிமை.
17. புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர்.
பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
18. மனிதன் தான் வாழ மரங்களை வெட்டு கின்றான். மரம் அழிந்ததால் மழை இல்லை. மண் மறுகிற்று . இதனால் குருவிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குருவிகள் வாழவழி இல்லாமல் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு வாழ்வதற்காக இடம் தேடி ஏதிலியாய் எங்கெங்கோ போயின .
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 =4
19. மலையாளம் - கோட்ட , கோடு
கன்னடம் - கோட்டே , கோண்டே
தெலுங்கு - கோட்ட
தொழு - கோட்டே
தோடா - க்வாட் , எனத் திராவிட மொழியில் எடுத்தாளப்படுகிறது .
20. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை” என்கிறார் ரசூல் கம்சதோவ்.
21. ஓடும் நீரையே தங்கள் குடிநீராகப் பயன்படுத்தும் இயல்புடையவர்கள். தங்கள் குடியிருப்புப் பகுதியை விட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகள், ஓடைகள் இவற்றிலிருந்து நீர் எடுத்துப் பருகி வருபவர்கள்.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அ) பொரி, பொறி
சோளம் பொரிக்கும் பொறியைக் கண்டு நான் வியந்தேன்.
ஆ) கனை, கணை
கனைக்கும் குதிரையைக் கண்ணன் கணையால் வீழ்த்தினான்.
23. தமிழாக்கம் தருக
அ) Ethnic group - இனக்குழு
ஆ) Ancestor - மூதாதையர்
24. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர் ஆக்குக
அ) 1. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போக வேண்டும்.
2. கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.
ஆ) 1. மயில் ஓர் அழகான பறவை.
2. பயிர் வளர தண்ணீர் வேண்டும்.
25.. ஏதேனும் ஒன்றுக்கு புணர்ச்சி விதி தருக
அ) புகழெனின் - புகழ் + எனின்
விதி 1 : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே < புகழெனின்
ஆ) செங்கயல் - செம்மை + கயல்
விதி 1 : ஈறுபோதல் < செம் + கயல்
விதி 2 : முன்னின்ற மெய்திரிதல் < செங்கயல்
26. வல்லின மெய்களை இட்டும் நீக்கி எழுதுக
அ)பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் , தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய _ கல்வியே_ பயன் அளிக்கும் என்றும் கருதினார்.
ஆ) தமிழர் ஆற்றுத் தண்ணீரைத் தேக்கிச் சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
27. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
அ) பிண்ணாக்கு
பிண்ணாக்கு - மாடுகளுக்கு பிண்ணாக்குக் கலந்த தண்ணீர் மிகவும் பிடிக்கும்.
பிள்நாக்கு - பாம்பிற்கு பிள் நாக்கு (பிளவுபட்ட நாக்கு) உண்டு.
ஆ) எட்டுவரை
எட்டுவரை - அவன் எட்டுவரை எண்ணினான்.
எள்துவரை - எள் துவரை போன்ற உணவுப் பொருள்கள் உடம்புக்கு நல்லது.
28. கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக.
அ) சங்கீதம் - இசை
ஆ) வித்தியா - கலை , கல்வி ( கலையறிவு )
இ) மகாஜனம் - பெருமக்கள்
ஈ) சாகரம் - கடல்
29. ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக
அ) முனிவிலர் - முனி + வ் + இல் + அர்
முனி - பகுதி
வ் - உடம்படுமெய் சந்தி
இல் - எதிர்மறை இடைநிலை
அர் - பலர்பால் வினைமுற்று விகுதி
ஆ) ஈன்ற - ஈன் + ற் + அ
ஈன் - பகுதி
ற் - இறந்தகால இடைநிலை
அ - பெய்ரெச்ச விகுதி
30. குற்றியலுகரப் புணர்ச்சி :
குற்றியலுகரச் சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிர் எழுத்துடன் புணரும்போது தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும். இதுவே குற்றியலுகரப் புணர்ச்சி.
சான்று :
மாசற்றார் - மாசு + அற்றார்
மாசு ( ச் + உ ) + அற்றார் - “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி ‘ உ ‘ மறைந்தது.
மாச் + அற்றார் - “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே “ என்னும் விதிப்படி ( ச் + அ = ச) ‘மாசற்றார்’ எனப் புணர்ந்தது.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. புகழுக்குரிய குணங்கள் :
அன்பு, ஈகை, ஒழுக்கம், பொறுமை, அடக்கம், இரக்கம், வாய்மை, உலக நடை அறிந்து அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்து வாழ்வதே, புகழுக்குரிய குணங்களாகும்.
பொது மறை வழி :
இணையற்ற உயர்ந்த புகழைப் போல உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாக நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை.
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் இல்” என்பது வள்ளுவம் கூறும் வழியாகும் .
32.“சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
இடம் :
பெரியவன் கவிராயர் எழுதிய ‘திருமலை முருகன் பள்ளு’ என்னும் நூலில் வடகரை நாட்டின் இயற்கை வளத்தைக் கூறும் பாடலில் இவ்வரி இடம் பெற்றுள்ளது.
பொருள்:
தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.
விளக்கம் :
வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகளின் ‘இந்தளம்’ என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும் . மதகுகளில் கட்டப்பட்டிருந்த சங்கிலியில் மீனைப் பிடிக்க வந்த உள்ளான் பறவை அமர்ந்திருக்கும். வண்டின் இசையில் பறவைகள் மயங்கி அமர்ந்திருப்பதால், மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும் இத்தகைய வளம் நிறைந்த நாடு வடகரை நாடு என்பதை இப்பாடல் விளக்குகிறது.
33. இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
கூறும் காரணங்கள் :
தமக்காக உழைக்காமல் பிறருக்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இந்திரனுக்கு உரிய அமிழ்தம் கிடைத்தாலும் அஃது உயிர் காப்பது என்பதற்காகத் தனித்து உண்ணமாட்டார்கள்.
யாரையும் வெறுக்க மாட்டார்கள் ; சோம்பல் இன்றி செயல்படுவார்கள்.
பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்.
புகழ்வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள்.
உலகம் முழுவதும் கிடைப்பதாகயிருந்தாலும் பழிவரும் செயல்களைச் செய்யார்.
எதற்கும் மனம் தளர மாட்டார்கள்.
இத்தகைய சிறப்பு உடையோர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
34.சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் எனக் கூறுவது :
நாட்டையும், மொழியையும் வாழ்த்தி, தாய் மொழிக்குத் தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களைப் போற்றிப் பாட வேண்டும்.
நமது தாய் மொழியாம் தமிழ் மொழியின் தொன்மம் , காலத்தால் அழியாத வகையில் வலிமை சேர்க்க பாடவேண்டும் எனக் கவிஞர் சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. கவிஞனிடம் மொழி இருக்கும் மூவகை நிலை :
மொழி என்பது திரவநிலையில், கவிஞன் விரும்பும் வகையில் அவனிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்கிறது.
எழுத்து மொழியாகப் பதிவு செய்யும் நிலையில் உறைந்துவிட்ட பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்து விடுகிறது.
அச்சிடப்பட்ட ஒரு கவிதையாய் மாறும் போது, அம்மொழி கவிஞனிடமிருந்து பிரிந்து சென்று விட்ட பொருளாய் மாறிவிடுகிறது.
36. மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது :
திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை .
திராவிடர்களை ‘மலை நில மனிதர்கள்’ என்று அழைக்கிறார் கமில் சுவலபில்.
“சேயோன் மேய மைவரை உலகம்” - என்று தொல்காப்பியம் உரைக்கிறது.
“விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ” - என்று திருமுருகாற்றுப்படை உரைக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் தமிழரின் கடவுளையும் மலையையும் தொடர்பு படுத்திய பதிவுகளாகும்.
கடையேழு வள்ளல்களுள் மலைப்பகுதிகளில் தலைவராகத் திகழ்ந்தார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் ‘மலை’ என்ற சொல் 17 இடப்பெயர்களில் முன்னொட்டாகவும் 84 இடங்களில் பின்னொட்டாகவும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு மலையானது அன்றும் இன்றும் மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்று திகழ்கிறது.
37. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்”:
என் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வேர் சங்கத்தில் தொடங்கி, இன்றைய காலம் வரையும் துன்பங்கள் பல நீங்கி உயர்தனிச் செம்மொழியாகச் செழித்தோங்கி இருக்கிறது.
பழமையும் பெருமையும் உடைய என் மொழியே உலகின் முதல் மொழி என்னும் போது எனக்குப் பெருமையே ,பண்பாடும் நாகரிகமும் நிறைந்த ஒரு மொழியாக என்றும் இளமையாக இருக்கும் புதுமை மொழியாக இருக்கும் தமிழ்மொழி என் தாய்மொழியாக இருப்பதை எண்ணுகையில் மிகுந்த பெருமை எனக்கு ஏற்படுகின்றது.
இயல் ,இசை, நாடகம் என முத்தமிழாகப் பிரிந்து உலகில் இருக்கும் எம்மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பைப் பெற்ற மொழி என் உயிரினும் மேலான என் தாய் மொழி தமிழ் .
இலக்கண அடிப்படையில் எழுத்திலக்கணம் ,சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்ற ஐந்து வகை இலக்கணங்களைப் பெற்றுத் தன்னிகரற்ற மொழியாக இந்த உலகிலே விளங்குகின்ற மொழி தமிழ்மொழி. உலகஇல் உள்ள ஏனைய மொழிக்களுக்கு இல்லாத தனிச் சிறப்பான பொருளிலக்கணத்தைக் கொண்ட ஒரே மொழியான தமிழ்மொழியை என் உயிர் என்பேன்.
38. ‘கோட்டை’ என்ற சொல் திராவிட மொழிகளில் வழங்கும் விதம் :
தமிழ் - கோட்டை , கோடு
மலையாளம் - கோட்ட , கோடு
கன்னடம் - கோட்டே , கோண்டே
தெலுங்கு - கோட்டே
துளு - கோட்டே
தோடா - க்வாட்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்புSECOND REVISION EXAM - MARCH 2022MODEL QUESTION PAPER - 1 & ANSWER KEY
PDF DOWNLODE : CLICK HEREMODEL QUESTION PAPER - 2 & ANSWER KEY
PDF DOWNLODE : CLICK HERE
10 ஆம் வகுப்புமுதல் திருப்புதல் தேர்வு -2022மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here
12 ஆம் வகுப்புமுதல் திருப்புதல் தேர்வு -2022மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here
12th Standard -Tamil -Study Material FIRST REVISION EXAM -February 202214 Mark - மொழிப்பயிற்சி - இலக்கணம் PDF DOWNLODE : Click Here
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
11 ஆம் வகுப்பு
இயல் - 5
சீறாப்புராணம்
PDF DOWNLODE : CLICK HERE
PDF DOWNLODE : CLICK HERE
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
11 ஆம் வகுப்பு
இயல் - 5
சீறாப்புராணம்
1 Mark questions
ONLINE TEST எழுத : Click Hereசீறாப்புராணம்
சீறாப்புராணம்
1 Mark questions (75) Pdf : Click Here
சீறாப்புராணம் BOOK BACK QUESTIONS : Click Hereசீறாப்புராணம் SLIP TEST QUESTIN & ANSWER : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 4
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
one word Questions & Answers PDF : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 4
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
one word Questions & Answers PDF : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
12 ஆம் வகுப்பு
பாநயம் பாரட்டல்
இயல் - 1 : முச்சங்கங் கூட்டி : கண்ணதாசன் - Click Here இயல் - 2 : வெட்டி யடிக்குது : பாரதியார் - Click Here
12 ஆம் வகுப்புஅணியிலக்கணம்
1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,ஏகதேச உருவக அணி - Click Here
12 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
2 mark QUESTIONS
இயல் 1,2,3 : Click Here